சுகாஷினி என்னும் புதுமைப்பெண்.

Photobucketஜெயா டிவியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் திருமதி சுகாசினி மணிரத்தினம் ‘ஹாசினியின் பேசும்படம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்,நான் பர்க்கத்தொடங்கிய நேரம் சுகாசினி தராசை வைத்து காமடி பண்ணும் நேரம்.வழமையாக ஜெயா டிவி பக்கம் போகாத ரிமோட் அன்று தவறுதலாக ஜெயா டிவி பக்கம் சென்றுவிட்டது. அன்று அவர் விமர்சனம் செய்தபடங்கள் ‘பா’ மற்றயது ‘ஓடிப்போகலாமா’ என்று நினைக்கிறேன் , அவர் நியாயதராசை கையில் எடுக்கும் போதுதான் பார்க்க தொடங்கியதால் விமர்சனத்தில் என்ன கூறினார் என்பது தெரியவில்லை.ஆனால் அவர் ‘பா’ படத்திற்கு இரண்டு மைனஸ் பாயிண்ட்டுகள் சொன்னார், உண்மையில் இவருக்கு மேல்மாடி பிசகி விட்டதுபோல் இருந்தது.

1 ) அமிதாப் நன்றாகத்தான் நடித்துள்ளார் ஆனால் எமக்கு இது புதிதில்லை, நாம் இது மாதிரி பாத்திரங்களை ‘பதினாறு வயதினிலே’ , அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களில் பார்த்துவிட்டோம். கமல் பண்ணினதோட பார்க்கும்போது அமிதாப் பாதிதான் பண்ணியிருக்கிறார்.ஆனாலும் ஒரு கமெர்சியல் நாயகன் இந்தளவு பண்ணியதே பெரியவிடயம்

2 ) ஹிந்திக்கு வேண்டுமானால் இவை புதிதாக இருக்கலாம் ஆனால் தமிழ், தெலுங்கில் இப்படி பல படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன, உதாரணமாக ‘மொவுனராகம்’ ext ….. என்று சொல்லிகொண்டே போகலாம், ஹிந்தியில் இப்படி ஒரு படம் வருவது இதுதான் முதல்த்தரம், இதுவும் ஒரு மைனஸ் பாயிண்ட்.

இவைதான் சுகாசினி கூறிய மைனஸ் பாயிண்ட்கள்.நான் ‘பா’ படம் இதுவரை பார்க்கவில்லை, ஆனால் ‘பா’படத்தில் அமிதாப்பின் நடிப்பாற்றலை இதுவரை யாரும் விமர்சித்து பதிவெழுதி பார்த்ததில்லை. சரி அமிதாப் கமலை விட குறைவாகவே நடித்திருக்கட்டும் அது எப்படி மைனஸ் பாயிண்ட் ஆகும்? அது தவிர சுகாசினி எதற்கு கமலுடன் அமிதாப்பை ஒப்பிடவேண்டும்? அமிதாப் கமர்சியல் முகமூடியை கழற்றி எத்தனை நாளாச்சு? அமிதாப் தனது வயதுக்கு தகுந்த வேடங்களில் நடிப்பது போன்றா கமலாக இருக்கட்டும் ரஜினியாக இருக்கட்டும் (சாரி தலைவா) நடிக்கிறார்களா? முதல்முறையாக ஒரு மொழியில் வித்தியாசமான படம் வெளிவருவது எப்படி மைனஸ் பாயிண்ட் ஆகும்?

சுகாசினி வழமையாகவே நல்லபடங்கள் , அல்லது நல்ல திறமையான நடிப்பாற்றல் உள்ள படங்கள் வந்தால் அவற்றை மணிரத்தினத்தின் படங்களுடனும், கமலின் படங்களுடனும் ஒப்பிட்டு விமர்சிப்பது வழக்கம், சிலசமயம் புதிய படங்களை இந்த இரு சிகரங்களுடனும் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதும் உண்டு. எதற்காக இந்த வேலை இவருக்கு? இவருக்கு மணியும், கமலும் முறையே கணவனும், சித்தப்பாவும்தான் அதற்காக இவரா மணிரத்தினத்தையும் , கமலஹாசனையும் எங்களுக்கு நினைவுபடுத்தவேண்டும் ? இவர் தன்னை மணிக்கும், கமலுக்கும் ஒரு பிரச்சார பீரங்கியாக காட்டிக்கொள்ள முனைவதுபோல் தெரிகிறது.

அது தவிர இவர்தான் பெண்களுக்கே முன்னுதாரணம் போலும், பெண்களை ஆணாதிக்கத்திலிருந்து விடுவிப்பது தான்தான் என்பது போலும் பேசுவது ரொம்ப காமடியாக இருக்கும். இப்படித்தான் நாடோடிகள் பார்வையில் சமுத்திரக்கனியிடம் ” இறுதியில் துரோகம் செய்யும் அந்தப் பையனுக்கும் பொண்ணுக்கும் அடிப்பது போன்ற காட்சிகளில் பெண்ணை அடிக்காததுபோல எடுத்திருக்கலாமென்று நினைக்கிறேன், ஏனெனில் திரையரங்குகளில் ஆண்கள் அந்தப் பெண்ணுக்கு அடிக்கும் போது விசிலடிப்பது ஆணாதிக்கத்தை காட்டுவதாக இருக்கிறது “என்று கூறினார். எனக்கு புரியவில்லை அந்தக்காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்? அந்தப்பையனை அடித்துவிட்டு அந்தப்பொண்ணுக்கு புத்திமதி கூற சொல்கிறாரா? அது மட்டும் ஆணாதிக்கமில்லையா? இவரது கருத்து பெண்களை உயர்வாக காட்டுவதைவிட ஆண்களை மோசமானவர்களா காட்டுவதாகவே படுகின்றது.

இப்படி பல கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் பெண்களை உயர்வு படுத்துகிறாரோ இல்லையோ ஆண்களை சிறுமைப்படுத்தவே முற்பட்டிருக்கிறார், இதற்கு இன்னுமொரு உதாரணம் இவர் இயக்கியதாக கூறப்படும் இந்திரா படத்தில் நாயகியான இவரது தங்கை அனுஹாசனை பல ஆண்கள் அசிங்கம் செய்வது போன்ற காட்சியை எடுத்திருப்பார், இதன் மூலம் ஆண்களை வக்கிரம் பிடித்தவர்கள் போல் காட்டி தனது அற்பசந்தோசத்தை வெளிக்காட்டியிருப்பார்.

பெண்களுக்கு முன்னுதாரணங்கள் பலபேர் இருக்கிறார்கள். அன்னை தெரேசா, அன்னை இந்திரா, மாக்கிரட் தச்சர், பெனாசிர் பூட்டோ… என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் மணிரத்தினம், கமலஹாசன் என்னும் இரண்டு சாதனை ஆண்களின் பின்னால் இருந்துகொண்டு தான்தான் பெண்ணினத்திற்கே காவல் என்பது போன்ற இவரது நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமானவை . அதுதவிர இன்றைய பெண்கள் சுஹாசினியின் கருத்து கேட்டுத்தான் தம்மை ஆணாதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டிய நிலையில் இல்லை. இவரைவிட சுயமாக சொந்தக்காலில் நிற்கும் , சுயமாக போராடி தலைமைதத்துவத்தை வகிக்கும் பெண்கள் இன்று அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள் என்பதை மேதகு சுகாசினி அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதுதவிர எல்லா ஆண்களையும் வக்கிரகாரர்களாகவும் பெண்ணாதிக்கம் உடையவர்களாகவும் சித்தரிப்பதையும் தயவுசெய்து நிறுத்துங்கள். காலம் மாறிவிட்டது இன்னமும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து குப்பை கொட்டாதீர்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »