நித்தியானந்தா சீசன்!!

போலி சாமியார் ஜோக்ஸ் :

1 . “சுவாமி உங்கள பத்தி வீடியோ ரிலீஸ் ஆகிருக்கு”
“ச்சை முதல்ல திருட்டு dvd அ ஒழிக்க முதல்வர்கிட்ட மனு குடுக்கணும்”

2 . ஸ்வாமியோட தற்பெருமையால பாரு போலீஸ் நம்மள வலை வீசி தேடுது ”
“ஏன் என்ன ஆச்சு”
” இந்தியாவிலயே அதிகமா மகளிர் இட ஒதுக்கீடு இருக்கறது நம்ம ஆசிரமத்தில் தான்னு பேட்டி குடுத்திருக்கார் ”

3. “கதவை திற……. னு தத்துவங்களெல்லாம் உதிர்த்துட்டு இப்படி கதவை
மூடி ஒளிஞ்சிட்டிருகிங்கலே ”
” காற்று வரட்டும்னு சொன்னேன் போலீஸ் இல்ல வருது ”

4 . “Finance கம்பெனி ஆரம்பிச்ச நீங்க இப்ப ஆசிரமம் அரம்பிசிருகீங்க ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன சுவாமி
” வித்தியாசம்- Finance கம்பெனில குடுக்கற பணம் donationஉ தெரியாம மக்கள் ஏமாறுவாங்க
ஆசிரமத்துக்கு குடுக்கற பணம் donationஉ தெரிஞ்சும் மக்கள் ஏமாறுவாங்க…..
ஒற்றுமை- ரெண்ட பத்தியும் மக்கள் பின்னாடி பீல் பண்றது
சுவாமி “உங்க அடுத்த டார்கெட்”
“ஸ்கூல், காலேஜ்”

5. நித்தியானந்தா படத்தில் இருப்பது தான் இல்லை கிராபிக்ஸ் என்று சமாளிக்கிறார்…. வேறு எவ்வாறெல்லாம அவர் சமாளிக்ககூடும் என்று பார்ப்போம்… நகைச்சுவைக்காக…..

  • படத்தில் இருப்பது நான் இல்லைங்க என் தம்பி…. சத்தியானந்தா … நாங்க ரெட்டை பிறவிகள்
  • லேபர் லா படி 8 மணி நேரம் தான் வேலை நான் என் சாமியார் duty முடிந்து என்ன செய்தால் உங்களுக்கென்ன.
  • கடந்த ஒரு மதமாக எனக்கு செலெக்டிவ் அம்னீஷியா நான் சாமியார் என்பதையே மறந்துவிட்டேன் “
  • அட நான் ஆளே இலிங்க நான் ஒரு கிராபிக்ஸ் லைட்ல மட்டும் தெரிவேன் ஆப் பண்ணி பாருங்களேன் ….(எஸ்கேப்)

//

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு, ஆதரவு தகவலை சேகரிப்பதில் அரசு தீவிரம்

Important incidents and happenings in and around the  world

நித்யானந்தா ஆசிரமங்களில் உள்ள வழக்கு விவரங்கள், அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியது குறித்த விவரங்களைத் தருமாறு, மாவட்ட போலீஸ் நிர்வாகத்திடம் அரசு கேட்டுள்ளது. நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இருந்த ஆபாச, “சிடி’ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல இடங்களில் நித்யானந்தா ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன; சில இடங்களில் ஆசிரமங்கள் மூடப்பட்டுள்ளன. தன் மீதான புகார்களை நித்யானந்தா மறுத்து வருகிறார்.
நித்யானந்தா குறித்து மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் உலா வரும் நிலையில், மாவட்ட போலீஸ் நிர்வாகங்களிடம் நித்யானந்தா பற்றி சில விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளது. தமிழகத்தில் எந்தந்த பகுதிகளில் நித்யானந்தா ஆசிரமங்கள் உள்ளன; அங்குள்ளோர் மீது இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, வழக்கு பதிவு செய்திருந்தால் அதன் விவரங்கள், ஆசிரமத்தில் தங்கியிருப்போருக்கும், நித்யானந்தாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
நித்யானந்தாவை எதிர்த்தும், ஆதரித்தும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எத்தனை; அதை நடத்திய அமைப்புகள் எவை; அந்த அமைப்புகள் மீது தீர்மானங்கள் எதுவும் போடப்பட்டுள்ளதா போன்ற அனைத்து விவரங்களையும், போலீசார் திரட்டி வருகின்றனர். ஆசிரமங்களுக்கு நித்யானந்தா எப்போது வந்தார்; அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், எத்தனை முறை வந்தார் போன்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »