வெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா

Photobucketபல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இன்று காலை களனி- கிரிபத்கொடையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து தலைக்குää வயிற்றுக்கு, உடம்புக்கு என மருந்து கொடுப்பதைப் போலவே எனக்கும் கொடுக்கத் தெரியும். அதே போலி வெறிநாய்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து என்னவென்பது குறித்து எனக்கு மட்டுமே தெரியும். தேவையானவர்கள் களனிக்கு வாருங்கள். போதாதற்கு களனி கங்கையும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக களனி பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த பிரதியமைச்சர், அதற்கான ஆதரவை வழங்க தான் என்றும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது

எதிர்வரும் சிறீலங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுவே எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »