நிருபர்கள் ஆவேசம் விவேக் ஓட்டம்…

பல் இளித்துப் போயிருக்கிறது விவேக்கின் வீரம். எனக்கு எவன் தயவும் தேவையில்லை. நடிகர் சங்கமும், மக்களும் இருக்காங்க. அது போதும். என்று ஆவேசமாக பேசியதோடல்லாமல் நிருபர்களின் குடும்பத்து பெண்களையும் ஏடாகூடமாக ஏசியிருந்தார், அவரது இப்போதைய ஸ்டேஜ் உரலுக்குள் விரலே மாட்டிக் கொண்ட மாதிரிதான்!

இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் மகனே என் மருமகனே படத்தின் பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜ் டி.வி தயாரிக்கும் படம் என்பதாலும், இப்படத்தை இயக்கியிருப்பது டி.பி.கஜேந்திரன் என்பதாலும் இந்த பிரஸ்மீட்டுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வந்திருந்தார்கள் நிருபர்கள். ஆனால் ஒரு கண்டிஷனோடு… இந்த நிகழ்ச்சிக்கு விவேக் வரக்கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன். ஆனால் பிரஸ்மீட் நடந்து கொண்டிருக்கும் போதே விவேக் வெளியே காத்திருப்பதாகவும், நீங்கள் அனுமதித்தால் அவரை உள்ளே அழைப்பதாகவும் தெரிவித்தார் டி.பி.கஜேந்திரன். இதையடுத்து நிருபர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நாங்கள் வந்ததே உங்களை மதித்துதான். அவர் வருவதாக கூறியிருந்தால் நாங்கள் வந்தே இருக்க மாட்டோம் என்று நிருபர்கள் கூற, அவர் உள்ளே வந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக கூறினார் கஜேந்திரன்.

இது வேறு நிகழ்ச்சி. அவரது பிரச்சனை வேறு. இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நிருபர்கள் பாதியிலேயே பிரஸ்மீட்டிலிருந்து வெளியேறினார்கள். இதையடுத்து விவேக்கை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்தால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

விவேக் கலந்து கொண்ட விழா -பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்கள்

ஜட்டி பிரா நடிகர் விவேக் கலந்து கொண்ட நல்வரவு படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரும்பிய இடமெல்லாம் போலீஸ். பத்திரிகையாளர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள் என்பதால் விவேக்கின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம் இது.

அமைதியாக துவங்கியது விழா. விவேக் உள்ளிட்ட அத்தனை பேரையும் மேடையில் ஏற்றியிருந்தார்கள். இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசும்போதுதான் விவேக் விஷயம் மெல்ல தலை து£க்கியது. விவேக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நடுவில் ஒரு விரிசல் விழுந்திருக்கிறது. நாமெல்லாம் சகோதரர்கள். பத்திரிகையாளர்களும் விவேக்கும் உட்கார்ந்து பேச வேண்டும். இனிமேல் அவர்களுக்குள் சுமூகமான நிலைமை வர வேண்டும் என்று பேச, சரக்கென்று முன்வரிசையில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர் நெல்லை பாரதி எழுந்தார். “சார்… இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக மட்டும் பேசுங்க. எங்களுக்கும் அவருக்கும் இருக்கிற பிரச்சனையை நாங்க எப்படி எதிர்கொள்வோமோ, அப்படி பார்த்துக்குறோம்” என்று குரல் கொடுக்க அமைதியாக இருக்கையில் அமர்ந்தார் செல்வமணி. பின்னாலேயே பேச வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் “பேசும்போது, இந்த இசைவிழாவை பற்றி மட்டுமே பேச வேண்டும். நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி பேசி தேவையில்லாத சர்ச்சையை உண்டு பண்ண வேண்டாம்” என்றார் சிறப்பு அழைப்பாளர்களிடம்.

இறுதியாக விவேக் பேச எழுந்தபோது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் அரங்கத்தை விட்டு வெளியேறினார்கள். விவேக் என்ன பேசினார் என்பதை இனிமேல் யாரிடமாவது விசாரித்தால் உண்டு.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

விவேக்குக்கு கருப்புக்கொடி… தயாராகும் சினிமா பிரஸ் கிளப்

வாய்க்கொழுப்பு நடிகர் விவேக் நடித்திருக்கும் நல்வரவு என்ற படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ந் தேதி பிலிம்சேம்பரில் நடைபெற இருக்கிறது. படத்தின் நாயகன், நாயகி ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் விவேக்கும் கலந்து கொள்வதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சார்பில் நிருபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து விவேக்கை எப்படி எதிர்கொள்வது என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியது சினிமா பிரஸ் கிளப். விவேக் அத்துமீறி பேசியதற்கு தயாரிப்பாளரோ இயக்குனரோ பொறுப்பாக முடியாது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது கோடிகளை கொட்டி படம் எடுப்பவர்களுக்கு வலியேற்படுத்துகிற செயல். எனவே விவேக் உள்ளே வரும் போது கருப்பு கொடி காட்டுவது என்றும், அவர் பேச ஆரம்பிக்கும் போது மட்டும் ஒட்டுமொத்த சினிமா பத்திரிகையாளர்களும் அரங்கத்தை விட்டு வெளியேறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தகவலை உடனடியாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த நிமோனியா விழிப்புணர்வு பேரணிக்கு வந்திருந்த விவேக்கை அங்கு எதிர்பார்க்காத நிருபர்கள், விவேக் வருவார் என்று தெரிந்திருந்தால் நாங்கள் வந்திருக்கவே மாட்டோம் என்று குரல் எழுப்ப, வெறுப்போடு வெளியேறினார் விவேக். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோதும், போட்டோகிராபர்கள் திரும்பிக் கொண்டு அவருக்கு முதுகு காட்டி நின்றார்கள். இப்படி தனக்கு போகிற இடத்திலெல்லாம் அவமானம் என்று தெரிந்தும் வருகிறார் என்றால் அதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

தங்கள் முடிவை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அதையும் மீறி விவேக் வருவாரா? பொறுத்திருப்போம்!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »