அசினும் சல்மான்கானும் ரகசிய டும் டும்?

அசினுக்கும் சல்மான்கானுக்கும் ரகசியத் திருமணம் நடந்ததாக படத்துடன் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

சல்மான்கானுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. அசினுக்கு மும்பையில் சல்மான்கான் வீடு வாங்கி கொடுத்ததாகவும் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மும்பை, கேரள பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. பஞ்சாபி முறைப்படியும், அசின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் வெளியிடப்பட்டது. ஆனால் விசாரித்ததில் இந்தப் புகைப்படம் ரெடி படத்துக்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது பற்றி அசினிடம் கேட்ட போது, “எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியைhd பார்த்து சிரிப்புதான் வந்தது.

கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ரெடி படத்தில் சல்மான்கானும் நானும் நடித்து வருகிறோம்.
அந்த படத்தில் எங்களுக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனை யாரோ போட்டோ எடுத்து நிஜமாகவே திருமணம் நடந்ததாக வெளியே பரப்பி விட்டுள்ளனர்…”, என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்!

திருமண வயதை எட்டாத மைனர் பெண்ணான லட்சுமி பிரணதிக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும் நாளை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி. ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி நடிகர் இவர். ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொழிலதிபர் நார்னே சீனிவாசராவ் மகள் லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நடத்த ஏற்கனவே முடிவானது.

ஆனால் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்பவில்லை என எதிர்ப்புகள் கிளம்பின. மேஜராகாத பெண்ணுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்று ஹைதராபாத் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்த சந்திரபாபு நாயுடு, மணப்பெண் தந்தை சீனிவாசராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வற்புறுத்தப்பட்டது.

இதையடுத்து திருமண வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. வருகிற மே மாதம் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்புகிறது. அப்போது திருமணத்தை வைத்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர். அதுவரை திருமணம் நடக்காது என கோர்ட்டிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் முன் கூட்டி திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.

நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். மே இறுதியில் அல்லது ஜூனில் திருமணம் நடத்தத் திட்டமிடுள்ளனராம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மீண்டும் சுயம்வரம் நடத்த ஆசை!-ராக்கி சாவந்த்

Photobucket“முதல் சுயம்வரத்தில் சிக்கிய மாப்பிள்ளை சரியான சுயநலப் பேர்வழி… எனவே மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்தி நல்ல மாப்பிள்ளையைத் தேர்வு செய்ய விரும்புகிறேன்” என்று இந்தி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை சுயம்வரம் நடத்தி தேர்ந்தெடுக்கப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார். உடனே அவரை மணக்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவர்களில் மூவரைத் தேர்வு செய்த ராக்கி, இவர்கள் மூவரையுமே பிடித்திருக்கிறது என குண்டு போட, அதிர்ந்தனர் கலாச்சார காவலர்கள். ஒருவழியாக அரைகுறை மனசோடு, எலேஷ் என்பவரை தேர்வு செய்தார். நிச்சயதார்த்தம் நடந்தது. எலேஷைப் பார்க்க கனடாவுக்குக் கூட சென்றார் ராக்கி. போய் வந்தபிறகு எலேஷை உதறித் தள்ளிவிட்டார் ராக்கி.
என்ன காரணம்?
எலேஷ் முதலில் தன்னை ஒரு பணக்காரர் என்று கூறினார். ஆனால் உண்மையில் அவர் ஒரு பெரும் கடன்காரர். இரவு விடுதிகளுக்குப்போய் பணத்தைத் தொலைக்கும் ஆசாமி. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் இவ்வளவும் எனக்குத் தெரிந்தது. வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதை வேறு பெருமையாக என்னிடம் கூறினார் எலேஷ். இன்னொரு பக்கம் அவரது குடும்பத்தினர் என்னை வேண்டா வெறுப்பாகவே பார்த்தனர். அவர்கள் யார் என்னை வெறுக்க… எனவே நானே வெறுத்து ஒதுக்கி விட்டேன் அவர்கள் அனைவரையும். என் கண்ணசைவுக்கு எத்தனையோ இளைஞர்கள் காத்திருக்க இந்த ஓட்டாண்டிக்காக நான் இத்தனை அவமானப்பட வேண்டுமா என்ற நினைப்பே எனக்கு தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்த ஆசையாக உள்ளது. முன்பு நான் சுயம்வரம் நடத்திய போது என்னை யாரும் உண்மையாக திருமணம் செய்ய விரும்பவில்லை. எல்லோரும் எனது பணம், பரிசுக்கு தான் ஆசைப்படுகிறார்கள். அப்படியில்லாமல் என்னை நேசிக்கும் இளைஞர் எனக்கு வேண்டும். இந்த முறை எனது பெற்றோர் உறவினர் துணையுடன் புதிய மாப்பிள்ளையைத் தேர்வு செய்வேன் என்றார். ஆக, பப்ளிசிட்டிக்கு ராக்கி ரெடி… காசு பார்க்க மீண்டும் தயாராகின்றன சேனல்கள்!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . Leave a Comment »