தமிழர்களிடமே பணம் புடுங்க நினைக்கும் விஜய் ……!!

எப்போது விஜய் படம் வெளிவந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும் வெளிநாட்டு தமிழர்கள் மொக்கை ஜோக்குகளை வெளியிட்டு அவரது தீவிர ரசிகர்களுக்கு கோவப்பழ ஜுஸ் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர் காங்கிரசில் இணைவதாக முடிவெடுத்த நேரத்தில் அதன் வேகம் இன்னும் கூடி ‘விட்ரு… அழுதுருவேன்’ என்கிற அளவுக்கு ஆனது நிலைமை. எப்படியோ அதிலிருந்து மீண்ட விஜய், அந்த கறையை போக்க நிஜமான உண்ணாவிரதமெல்லாம் இருக்க நேர்ந்தது.

தற்போது வந்திருக்கும் பிரச்சனைதான் என்ன? வட அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ் சங்கம் சார்பாக அழைக்கப்பட்டாராம் விஜய். போக்குவரத்து செலவு, தங்குமிடம் இரண்டு மட்டும் எங்கள் செலவு. மற்றபடி உங்கள் வருகை. எங்களுக்கு பெருமை என்று அழைத்தது சங்கம். சில மாதங்களுக்கு முன்பு வருவதாக ஒப்புக் கொண்ட விஜய், நிகழ்ச்சி நெருங்கும் நேரத்தில் 25 லட்சம் கொடுத்தால்தான் வருவேன் என்கிறாராம்.

உங்களை நம்பி இங்கிருக்கிற சொந்தங்களிடம் சொல்லிட்டோம். இப்ப இவ்வளவு பணம் கேட்டா என்ன செய்யுறது என்கிறார்களாம் அவர்கள். பேச்சு வார்த்தையின் முடிவு டொய்ங்க்! (தொடர்பு இழையே அறுந்து போச்சுங்க).

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »

ரஜினியின் கதை முடிந்ததா?

சிங்கப்பூர் செல்லமுன்னர் ரஜினி வெளியிட்ட கீழே உள்ள குரலை கேளுங்கள்……அவரால் ஒழுங்காக பேசவேமுடியல……குரல் உடல் எல்லாமே தளர்ந்துவிட்டது அப்பட்டமாக தெரிகிறது…..

இவருக்கு கிட்னி மாற்றவேண்டியது உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் ஒரு புதுக்கதையை கிளப்பி விட இந்த முட்டாள் ஊடகங்களும் அதை பிரச்சாரம் செய்கின்றன.“நெருங்கிய உறவினர்கள் மட்டுமே சிறுநீரக தானம் செய்ய முடியும் என்பதால் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் அதற்கு முன் வந்திருக்கிறார்கள்.

ஆனால் அதிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது சிறுநீரகங்கள் பொருந்தினால் மட்டுமே அதற்கு சாத்தியமிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இரண்டுமே பொருந்தவில்லையாம் ரஜினிக்கு.

மனைவி லதா முன் வந்தாலும் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அந்த திட்டத்தையும் கைவிட்டிருக்கிறார்களாம் மருத்துவர்கள்.”

இது தான் அந்த முட்டாள் தனமான செய்தி.இவர்களை போன்ற பணமுதலைகள் தமது குடும்பத்திலிருந்து சிறுநீரகம் தானம் செய்யமாட்டார்கள் என்பது எமக்கு தெரியாத விஷயம் அல்ல.ஆனால் அவரது மகள்மார் தர முன்வந்தார்கலாம் ஆனால் போருந்தவில்லயாம், மனைவிக்கு சக்கரை வியாதியாம் யார் காதில் பூச்சுற்ற பார்க்கிறார்கள்? எவனாவது ஏழை முட்டாள் ரசிகன் சிறுநீரகம் கொடுப்பான் அல்லது சட்டவிரோதமாக யாரவது கடத்தப்பட்ட நபரிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம் வெளிநாட்டு மருத்துவமனையில் வைத்து பொருத்தப்படும் இது தான் உண்மை……

இல்லாத இளமையை இருப்பதாக டோப்பா போட்டு நடிக்கும் கொடுமை எப்பொழுது தான் மாறுமோ…….

அவரே சொல்கிறார் அந்த ஆடியோவில் பணம் வாங்குறேன் நடிக்குறேன் என்மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க என்று ….அந்தாளுக்கே புரியும் போது இவர்களுக்கு எங்கே போச்சு புத்தி? இந்த லட்சணத்தில் அவர் இனிமேல் தான் ரசிகர்கள் தலைநிமிர வைக்கபோகிறாராம்!! இந்த வசனத்தை எத்தனை தடவை கேட்டிருப்போம்.அவரது இரண்டு மகள் கல்யாணத்தை விட வேற என்ன செய்து விட்டார் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ?

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 3 Comments »

அம்மணமாக்கப்பட்டுள்ள தி.மு.க!

ஒரு ஈழத் தமிழனாக கூறுகிறேன் எம் மக்களிற்கு எம்மவர்களை கொன்றொழித்த, கொலை செய்வதை தொழிலாக செய்யும் மஹிந்த ராஜபக்ஸ மீது இல்லாத வெறுப்புணர்வு, வன்மம் கருணாநிதி மீது உண்டு…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சவப்பெட்டி மீது இன்னொரு ஆணி அடித்தாகி விட்டது..

தேர்தல் முடிவுகளால் உள்ளாடைகளுடன் நின்றிருந்த தி.மு.க கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்படுள்ளது.

இந்த தேர்தலில் 3 ஆவது இடத்தைப் பிடித்த தி.மு.க தொடர்ந்து அதே நிரந்தர இடம் தானா என கருணாநிதியே சிந்திக்க வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன..

பழம்பெருமை வாய்ந்த திராவிடக் கட்சி என (தங்களை தாங்களே) கூறிக்கொள்ளும் திமுகவின் எதிர் காலமே சூனியமாக காணப்படுகிறது.

நெருப்பாறுகளைக் கடந்து திமுக முடிசூடும், கனிமொழி கைதால் திமுகவிற்கு பாதிப்பில்லை என வீரமணி போன்ற கைப்பிள்ளைகள் காமடி பண்ணினாலும், இந்த அதிர்ச்சிகளை கடந்து மீண்டு வர குறைந்தது 2 ஆண்டுகள் ஆவது தேவை என்பது எனது அனுமானம்.

சரியாக சொல்வது என்றால் தாங்கள் விதைத்த வினைகளை அறுவடை செய்யும் காலப்பகுதியில் கருணாநிதி அண்ட் கோ இருக்கின்றனர்.. திராவிட முன்னேற்றக்கழகம் என்று இருந்த திமுகவை (திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி) கம்பெனியாக மாற்றியதுக்கான பலாபலன்களை தீவிரமாக அறுவடை செய்து கொண்டு இருக்கிறார் தமிழின காவலர் (???) கருணாநிதி.

மானே மயிலே, உயிரே மயிரே, ஐயகோ, நெஞ்சு பொறுக்கலையே போன்ற பராசக்தி பாணி வசனங்கள் தனது தொண்டனிடத்தில் கூட வொர்க் அவுட் ஆகாததைப் பார்த்து சித்தம் கலங்கி இருப்பார் கருணா.

தேர்தல் முடிவுகளால் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்ட கருணா அண்ட் கோ நீதிமன்றத்தால் மீண்டும் ஒருமுறை ஊழல் வாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

ஒரு குடும்பத்தால் ஒரு ஜனநாயக நாட்டுக்கு 1 .76 இலட்சம் கோடி இழப்பை ஏற்படுத்த முடியும் என்றும் (ஏறத்தாள 5 இலட்சம் கோடி ரூபாய் இலங்கைப் பணம்), இழப்பை ஏற்படுத்தியோர் படை பரிவாரங்கள் புடை சூழ அதிகாரத்துடன் உலா வர முடியும் என்றும் காட்டியது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் ஆட்சிக்காலம்..

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என பாட்டிமார் கதை சொல்ல ஆரம்பித்தாலே அது ஸ்பெக்ட்ரம் ராஜாவா என பேரப்பிள்ளைகள் கேட்கும் அளவுக்கு திமுகவின் மானம் சந்தி சிரித்தது உலகறியும்…

ஸ்பெக்ட்ரம் என்பதை வெறும் பத்தோடு பதினோராவது ஊழலாகப் பார்ப்பதைத் தவிர்த்து இது ஒரு நாட்டின் ஜனநாயகத்தை ஆட்டம் போட வைத்த காரணியாக பார்க்க வேண்டும்.

1. 76 இலட்சம் கோடி என்பது இந்தியா போன்ற ஏழைகளின் தேசத்திற்கு மிக பெரிய பணம்.

இப்பணம் இலங்கை போன்ற சிறிய தேசத்தின் ஒரு வருட உள்நாட்டு வருமானம், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தின் ஒருவருட மொத்தத்தேசிய உற்பத்தி வருமானம்.

இந்தப் பணத்தினை வைத்து சகல வசதிகளும் உடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டலாம்..

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகள் கட்டலாம்..

இலட்சக் கணக்கான மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கலாம்..

எவ்வளவு பெரிய பகல் கொள்ளை இது..

ஆனால் திருடியவர்கள் ஜாலியாக முரசொலியில் கவிதையும் உடன் பிறப்புகளுக்கு கடிதமும் எழுதிக்கொண்டு இருக்கலாம் என்றால் ஒரு சராசரி தேசப்பற்றுள்ள குடிமகனுக்கு ஜனநாயகத்தின் அதன் அஸ்திவாரம் மேலே அவநம்பிக்கை வராதா?

வெறும் ஐந்துஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசாங்க உழியர்களுக்கே சுமார் ஐந்து/ ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்ககூடிய அதிகாரம் படைத்த இந்திய நீதித்துறை இந்த கொடிய கொலைக்கு குறைந்தது ஆயுள் தண்டனை கொடுக்க கூடாதா..?

ஊர் கூடி கிடாய் வெட்டியவனை விட்டு விட்டு இரத்த வறை சாப்பிட்டவனை பிடித்தது போல, கருணாநிதி அண்ட் கோவால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட மாபெரும் ஊழலுக்கு பலிக்கடா ஆக்கப்பட்டார் ராஜா.

நான் இங்கு ராஜாவை குற்றம் அற்றவர் எனக் கூற முற்படவில்லை…

ஆனால் அவ்வளவு பெரிய தொகையை தனி ஒருவரால் அபேஸ் பண்ணி இருக்க முடியாது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்…

ஆனால் கனிமொழி கைது என்னை பொறுத்தவரை காலம் தாழ்த்திய ஓன்று…

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட பின்பும் ஒரு அமைச்சர் இரண்டு ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளார் என்பது எந்த ஜனநாயக தேசத்தில் சாத்தியம்? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட போது கை கொட்டி வாய் பொத்தி கவிதை எழுதிக் கொண்டிருந்த கருணாநிதி, சிபிஐ யின் குற்ற பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்ட போது முதன் முறையாக வெகுண்டு எழுந்தார்…

ஈழ தமிழர்களிற்காக ஒன்று கூடாத திமுக பொதுச்சபையைக் ஒன்று கூட்டினார்…

அங்கே கனிமொழி குற்றம் அற்றவர் என தீர்மானம் நிறைவேற்றினார். (திருடியவர்களே ஒன்று கூடி கூட்டம் போட்டு திருட்டு நடக்கவில்லை என சாதிப்பது உலகில் முதன் முறை என நினைக்கிறேன்).

ஆனால் இதே கருணாநிதி ஈழம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது மன்மோகன் சிங்கிற்கு கடிதம், சோனியாவிற்கு காதல் கடிதம், மனிதச் சங்கிலிப் போராட்டம் என காமடி பண்ணிக் கொண்டிருந்தார்…

காமடியின் உச்சமாக அவர் நிகழ்த்திய காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான உண்ணாவிரதம் வடிவேலுவின் வின்னர் பட காமடிகளை மிஞ்சியது வரலாறு.

ஆனால் இவருடைய காமடிகளால், கபட நாடகங்களால் நாதியற்றுப் போய் செத்து போன ஈழ தமிழர்கள் எத்தனை பேர்?

ஒரு ஈழத் தமிழனாக கூறுகிறேன் எம் மக்களிற்கு எம்மவர்களை கொன்றொழித்த, கொலை செய்வதை தொழிலாக செய்யும் மஹிந்த ராஜபக்ஸ மீது இல்லாத வெறுப்புணர்வு, வன்மம் கருணாநிதி மீது உண்டு…

துரோகியை விட எதிரி எவளவோ மேல்..

மதுரையில் கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சரும் ஆன
அழகிரியும் அவருடைய அடியாட்களும் நடாத்திய அராஜகங்கள் மறக்க கூடியதா?

அண்ணன் ஆனா… (மதுரையில் அழகிரியை “அ” என்று பயம் கலந்த மரியாதையாக அழைப்பார்கள்) அவருடைய அடியாட்கள் ஆன சு……… பு……. வகையறாக்கள் மதுரையில் நடாத்திய அராஜகங்கள் வில்லத்தனங்கள் கில்லி பிரகாஸ்ராஜ் தனமானவை…

அடுத்தடுத்த குத்துகளால் சித்தம் கலங்கி இருக்கும் தமிழின காவலருக்கு அவரின் எதிர் காலம் தொடர்பாக நான் தர விரும்பும் சில டிப்ஸ் :-

1] அரசியலை துறந்து முழு நேர சினிமா பணியாளராகி விடலாம்…

2] திமுகவை தேதிமுகவுடன் இணைத்து விட்டு தனது தலைவன் விஜயகாந் என உடன்பிறப்புக்களுக்கு அறிவித்து விடலாம்…

3] கடிதம் எழுதுவது எப்படி என அறிவாலயத்தில் ரியூசன் கொடுக்கலாம்…

4] கனிமொழி எனக்கு பிறக்கவில்லை என அறிவித்து விடலாம்…

5] தொழில் முறை ஊழல் செய்வது எப்படி என நூல் எழுதலாம்…

6] ஈழ தமிழருக்கு ஈழம் பெற்றுக் கொடுப்பது எப்படி எனும் நசைச்சுவை விவாத மேடைகள் நடத்தலாம்…

7] எவ்வளவு அடிச்சாலும் தாங்குவது எப்படி என (Personality development course) எடுக்கலாம்..

இனி கருணாநிதி அண்ட் கோவை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது..

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 4 Comments »

யார் இந்த ரஜினிகாந்த்! ஏன் இந்த கேடு!!:

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள். யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும். அவர் ஒரு சிறந்த நடிக்கிறார், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.

அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள். இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.

எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள் கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

ரஜினியின் உண்மையான முகத்திரையை கிழித்த TR

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 56 Comments »

வெளிவந்துவிட்டது TR கொடுமை பாகம் 6…….

கேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் தனது மகன் நடித்த வானம் படத்துக்கு வாயாலே விளம்பரம் செய்து அதற்காக ஒரு குத்துப்பாடலையும் இயற்றி பாடியுள்ளார்…..அதுமட்டுமல்லாது தனக்கு சாப்பிட சாப்பாடு இல்லாமல் பசியோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்…….

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »