விஜயும் சில முட்டாள்களும்..Anything for vijay..ஒரு அலசல்..

Anything for Vijay

கடந்த சில நாட்களாக SS Music தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் தொடர்ச்சியாக வந்ததை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். விஜயை சந்திக்க இவர் என்ன செய்யப்போகிறார் என்ற வாசகத்துடன் ஒரு டப்பா விஷம், ஒரு ஹீட்டர் மற்றும் தலையை மழிக்க ஒரு கத்தி ஆகியவை காட்டப்பட்டன. அப்போதே இது ஏதோ ஏடாகூடமான நிகழ்ச்சி என்பது புரிந்தது.  சந்தேகமில்லை இதைவிட மட்டமான ஒரு நிகழ்ச்சி இதுவரை வந்திருக்க முடியாது.

அந்த நிகழ்ச்சியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒவ்வொரு செயலாக செய்கிறார்கள் (மன்னிக்கவும் இதை திறமை என சொல்வதற்கில்லை). அது குறித்து நடுவராக இருக்கும் அந்த டிவி பெண் தொகுப்பாளர் கருத்து தெரிவிக்கிறார். மற்றொரு நடுவர் முகத்தை மலச்சிக்கல் வந்த மாதிரி வைத்துக்கொண்டு கருத்து இல்லை என்று சொல்கிறார். கடைசியாக முடிவு அறிவிக்க வேண்டிய நேரத்தில் அவரது கருத்து கேட்கப்பட, அவர் போட்டியாளர்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார். அந்த கேள்விகள் யாவும் அவரை சிறைவைக்கும் அளவுக்கு அநாகரீகமானவை, மன்னிக்க இயலாதவை மற்றும் மனிதத்தன்மையற்றவை.

வா போ என்கிற ஏகவசனங்கள், வெளியே போ எனும் அதட்டல்கள் (கெட் அவுட் என இருமுறை கத்துகிறார்), நீ போட்டிக்கு தகுதியில்லாதவன் எனும் நேரடி அவமானங்கள் என அவரது ஒவ்வொரு வாக்கியமும் மனித உரிமை மீறலாகவே இருந்தது. இவை முன்பே திட்டமிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஒரு நிறுவனத்தில் அதன் ஊழியருக்கு இதில் எதையாவது ஒன்றை செய்தாலும் அது குற்றம். அந்த குற்றங்கள் எதுவும் நடப்பதில்லை என நாம் சொல்லவில்லை. ஆனால் அப்படியொரு செய்கை நடைபெற்றதாக செய்தி வந்தாலே அந்த நிறுவனம் அதை நாங்கள் செய்யவில்லை என மறுக்கும். ஆனால் இங்கு இப்படியான ஒரு குற்றச்செயலை பட்டவர்த்தனமாக அதுவும் நாளுக்கு நூறு விளம்பரம் போட்டு ஒளிபரப்புகிறார்களே என்பதுதான் நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.

இதற்குப் பிறகு ஒரு போட்டி இருந்தது. அந்த கான்ஸ்டிபேஷன் நடுவர் இருவரையும் தகுதியவற்றவர்கள் என சொல்லி இறுதிவாய்ப்பாக ஒரு ஒரு போட்டிவைக்கிறார் (இதுவரையான போட்டிகளில் நீங்கள் ஜெயிக்கவில்லை, உங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் தோற்றுவிட்டார்கள் என அதற்கு ஒரு விளக்கம் வேறு). விஜயை சந்திக்க மூன்று வாய்ப்புக்கள் தரப்படுகிறது. ஒன்று- விஷமருந்துவது, இரண்டு- ஹீட்டரில் கைவைப்பது(அது இயங்கும்போது) , மூன்று- தலையை மழித்துக்கொள்வது. இதில் ஏதேனுமொன்றை செய்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம் என்றால் எதை செய்வீர்கள் என கேட்கிறார்கள். அப்பெண் விஷமருந்துவேன் என்கிறார், அந்த இளைஞன் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன் என்கிறார்.

நீங்கள் இதை பார்த்திருந்தால் அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என சொல்லுங்கள்.. பார்க்கவில்லை எனில் இதைப் படிக்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். மொட்டை அடிக்க கத்தியை தலையில் வைத்தபிறகு நடுவர்கள் ஞானோபதேசம் செய்கிறார்கள், “இதை நீங்கள் விரும்பும் விஜய் விரும்புவாரா?”. பிறகு மற்றொரு நடுவர் சொல்கிறார் “உங்களது இண்டலிஜென்சை சோதிக்கவே இந்த சுற்று வைக்கப்பட்டது”.  சோனியா அகிம்சையைப் பற்றி பேசியதை கேட்ட செவிகள் மன்மோகன் ஊழல் ஒழிப்பை பற்றி பேசியதை பார்த்த கண்கள் நம்முடையது, ஆகவே இந்த காட்சி ஒன்றும் நம்மை திகைக்க வைக்காது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

விஜயை பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு போட்டியில் கலந்துகொள்பவன் ஒரு முழுக்கேனையனாகத்தான் இருப்பான். ஒரு நடிகனைக் காண டான்ஸ் ஆடி ஜெயிப்பதே கேவலம், அதையே செய்தவன் மயிரை சிரைக்க மாட்டானா?  அட மூதேவிகளே இண்டலிஜென்சை சோதிக்க இதுவா வழி? எனக்குகூட விஜய் முகத்தில் காறித்துப்பி அவரது இண்டலிஜென்சை சோதிக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் நாம் மனிதர்கள் என்பது நினைவுக்கு வந்து அமைதிகொள்கிறோமா இல்லையா.. டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா ?

விஜய்க்காக எதையும் செய்யத்துணிபவன் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருப்பான். ஆனாலும் ஒரு மனநோயாளியின் மான அவமானங்களைப்பற்றியும் மனித உரிமையப்பற்றியும் கவலைப்படுவது நம் கடமை.

இது தொலைக்காட்சிகளில் மட்டுமில்லை பதிவுலகத்தில் கூட வினு போன்ற கோமாளிகள் விஜய் தான் உலகம் போன்றும் அவனது ஒரு சுமாரான படமான காவலன் வென்றால் அது உலக சாதனை என்றும் நினைத்துக்கொண்டு கனிமொழி படத்தில் வருவது போல கற்பனையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்…..நண்பர்களே சிந்தியுங்கள் அந்த கோமாளி நடிகனை பார்க்க நீங்கள் விஷம் குடித்தோ உங்கள் உடலில் வாகனத்தி ஏற்றியோ என்ன பயன்….என்ன முட்டாள்தனம் இது…படம் நல்ல இருந்தால் ரசியுங்கள் அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்…….இப்படி ஒரு நிகழ்ச்சியை வேறு எந்த நடிகனுக்கும் வைக்காமல் விஜய்க்கு வைத்ததன் மூலம் விஜய் ரசிகர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை உலகத்திற்கு காட்டி இருக்கிறார்கள்……

நன்றி :வில்லவன் . . .

அந்த கொடுமைகளை பாருங்கள்….

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 13 Comments »

கள்ளத்தொடர்புக்கு தடை போட்ட கணவன் கழுத்தை இறுக்கி கொலை! மனைவி – கள்ளக்காதலன் கைது

கடப்பா அருகே கள்ளத்தொடர்புக்கு இடைïறாக இருந்த கணவனை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு தட்சண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே புருஷகட்டே பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரபீக் (வயது 42). இவரது மனைவி ருபியா (37).

இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அப்துல் ரபீக், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உப்பினங்கடி அருகே கடப்பா பகுதியில் சொந்தமாக வீடு கட்டினார்.

அந்த வீட்டை கொலம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முகமது ஷெரீப் (47) கட்டி வந்தார். அப்போது அப்துல் ரபீக் மனைவி ருபியாவுக்கும், முகமது ஷெரீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. முகமது ஷெரீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

அப்துல் ரபீக் வீட்டில் இல்லாதபோது இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.. கொலை செய்ய திட்டம் இதுபற்றி அறிந்த அப்துல் ரபீக், தனது மனைவி ருபியாவை கண்டித்துள்ளார்.

ஆனாலும் கள்ளக்காதலன் முகமது ஷெரீப்பை மறக்க முடியாமல் ருபியா தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து, கள்ளக்காதலுக்கு இடைïறாக இருக்கும் அப்துல் ரபீக்கை கொலை செய்ய 10 நாட்களுக்கு முன்பு திட்டம் தீட்டி உள்ளனர்.

அப்போது முகமது ஷெரீப், ருபியாவிடம் இரவில் அப்துல் ரபீக் தூங்க வரும் போது பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடு. அவர் தூங்கியதும் நான் வருகிறேன்.

இருவரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விடலாம் என்று கூறி உள்ளார். கழுத்தை இறுக்கி கொலை அதன்படி நேற்று முன்தினம் இரவு அப்துல் ரபீக் வீட்டுக்கு வந்துள்ளார்.

அவர் தூங்க செல்வதற்கு முன்பு ருபியா, பாலில் தூக்க மாத்திரையை கலந்து கணவர் அப்துல் ரபீக் வசம் கொடுத்து உள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் அப்துல் ரபீக் தூங்கி விட்டார்.

அந்தநேரத்தில் திட்டமிட்டபடி முகமது ஷெரீப் அங்கு வந்துள்ளார். பின்னர் ருபியாவும், கள்ளக் காதலன் முகமது ஷெரீப்பும் சேர்ந்து கேபிள் வயரால் அப்துல் ரபீக் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

மனைவி-கள்ளக்காதலன் கைது இதுகுறித்து கடப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து ருபியா, அவளது கள்ளக் காதலன் முகமது ஷெரீப் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் !

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மிஷ்கினின் யுத்தம் செய் சிறுத்தையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யின் காவலன் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் வெளியான விஜய் படங்களில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் என்பது கவலைதரும் விஷயம்.

5. ஆடுகளம்
வெற்றிமாறனின் ஆடுகளம் சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 18.93 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 3.01 கோடிகள்.

4. காவலன்
நான்காவது இடத்தில் காவலன். இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 2.83 கோடிகள். ஆடுகளத்தைவிட குறைவு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 22.5 லட்சங்கள்.

3. தூங்காநகரம்
சென்ற வாரம் வெளியான தூங்காநகரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் மூன்று தின வசூல் 28.64 லட்சங்கள்.

2. சிறுத்தை
சிவா இயக்கியிருக்கும் சிறுத்தைக்கு இரண்டாவது இடம். இதன் சென்ற வார இறுதி வசூல் 32.44 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 3.73 கோடிகள். பொங்கலுக்கு வெளியான படங்களில் இந்தப் படமே சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் அதிக கலெ‌க்சனை‌ப் பெற்றுள்ளது.

1. யுத்தம் செய்
மிஷ்கினின் இந்தப் படம் முதல் வாரத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளியான முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 34.07 லட்சங்கள்.

Source : Webdunia

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 Comments »

தாய் செக்ஸ் வைத்துக் கொள்ள இணங்காததால் 8 வயது மாணவர் கடத்தி கொலை!

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் காடாகுளத்தூரை சேர்ந்தவர் மகாலிங்கம்.

இவரது மகன் சக்திகணேஷ்(வயது 8). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 30-ந்தேதி வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த அவனை திடீரென்று காணவில்லை.

இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கிளியனூர் அருகே உள்ள தானாம்பாளையம் சித்தாறு பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தோண்டி பார்த்த போது எலும்பு கூடு, மண்டை ஓடு மற்றும் சிறுவன் அணியும் காக்கி சட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து காணாமல் போன மாணவன் சக்திகணேசின் தாய் சத்தியா அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் தனியாக கிடந்த காக்கிச்சட்டையை பார்த்துவிட்டு அது தனது மகனுடைய சட்டைதான் என்று உறுதி செய்தார்.

இதைத்தொடர்ந்து மாணவன் சக்திகணேஷ் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டு ஆற்றில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையொட்டி சந்தேகத்தின் பேரில் கிளியனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜாவை (வயது 23) இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மாணவன் சக்திகணேசின் தாய் சத்தியா மீது ராஜாவுக்கு ஆசை ஏற்பட்டது. அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று துடித்தார். ஆனால் சத்தியா அதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் சத்தியாவை மிரட்டி பணியவைக்க வேண்டும் என்பதற்காக அவரது மகன் சக்திகணேசை ராஜா ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். சித்தாறு பகுதியில் அவனது கைகால்களை கட்டிப்போட்டு விட்டு உன் அம்மாவை அழைத்து வருகிறேன் என்று கூறினார். அவன் ஆத்திரத்தில் திட்டியதால் கோபம் அடைந்த ராஜா சணல் கயிற்றால் சக்திகணேசை இறுக்கி கொன்றார்.

பின்னர் பிணத்தை அங்கு போட்டு விட்டு கிளியனூருக்கு வந்து சத்தியாவிடம் உன் மகன் இருக்கும் இடம் எனக்கு தெரியும். என்னுடன் வா என்று மோட்டார் சைக்கிளில் சித்தாறு பகுதிக்கு இரவு அழைத்து சென்றார். அங்கு சென்றவுடன் தனது ஆசைக்கு இணங்கினால் அவனை காட்டுகிறேன் என்று கூறினார்.

தன்னை அனுபவிக்கத் தான் ராஜா இவ்வாறு நாடகமாடுகிறார் என்று நினைத்து அவர் மறுத்தார். உடனே ராஜா சத்தியாவை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். சத்தியா அவரது பிடியில் இருந்து தப்பி ரோட்டுக்கு ஓடிவந்து மற்றொருவர் உதவியுடன் வீட்டுக்கு வந்தார். சத்தியா தப்பி சென்று விட்டதால் ராஜா உஷாரானார்.

கிளியனூர் ஒட்டத்தெருவை சேர்ந்த தனது நண்பர் ராஜாவுடன் (14) மாணவன் சக்திகணேசின் பிணத்தை ஆற்றில் மணல் தோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் ஊரில் நடமாடிவந்தார்.

போலீஸ் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளி ராஜாவையும், அவரது நண்பர் ராஜாவையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

சத்தியா ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை மிரட்டவே மாணவனை கடத்தி கொலை செய்து விட்டேன் என்று தொழிலாளி ராஜா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 4 Comments »