ஒசாமா பின்‌லேடன் பலி : பாகிஸ்தானில் சுட்டுக்கொலை !

அல்குவைதாவின் தலைவர் ஒசாமாபின்லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பின்லேடனின் உடலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, விரைவில் அறிக்கை வெளியிட இருக்கிறார்.
பாகிஸ்தானில் கொலை : அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., பாகிஸ்தானில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது , தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு தங்கும் விடுதியில் சுற்றி வளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அண்மையில் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒசாமா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்ட பயங்கரவாதி. அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர் ஒசாமா தேடுதல் வேட்டையை அமெரிக்கா முடுக்கி விட்டது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக ஒசாமா செயல்பட்டது அமெரிக்க புலனாய்வில் தெரியவந்தது. ஒசாமாவின் இருப்பிடம் ரகசியமாகவே இருந்து வந்தது. அவ்வப்போது ஒசாமா தோன்றும் வீடியோ காட்சிகள் மட்டும் ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா தற்போது பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்குவைதா எச்சிக்கை : அண்மையில் அல்குவைதா  இயக்கம் வெளியிட்ட சி.டி., யில்., தங்கள் தலைவர் ஒசாமாவை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஒசாமா பின் லேடன்க்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்……..

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

கனத்தையில் தமக்குரிய கல்லறையை தெரிவு செய்த மோ்வின் சில்வா

பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று புகழ்பெற்ற பாடகர் எச்.ஆர்.ஜோதிபாலவின் 23ஆவது ஞாபகார்த்த தினத்தை நினைவு கூருவதற்காக பொரளையில் உள்ள கனத்தை மயானத்திற்குச் சென்றபோது, தமக்குரிய கல்லறையையும் தெரிவுசெய்து ஒதுக்கிக் கொண்டார்.

காலம்சென்ற பாடகரின்  கல்லறைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் சில்வா திடீரென அனைவரினதும் ஆச்சரியத்திற்கு மத்தியில், எதிர்காலத்தை பற்றி யாருமே நிர்ணயிக்க முடியாது என்று கூறிக் கொண்டே தமது கல்லறையை தாம் இப்போதே ஒதுக்கி கொள்வதாக கூறினார்.

இதன் பின்னர் காலஞ்சென்ற பாடகரின் கல்லறைக்கு சமீபமாக ஒரு வெற்றிடத்தை காண்பித்து அதனை தமக்கு ஒதுக்கப் போவதாக தெரிவித்த அமைச்சர் தமது செயலாளரிடம் கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமார் கமீலுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்குமாறு கூறினார்.

ஆணையாளர் கமீலுடன் சிறிது தூரத்தில் நின்று கொண்டு தொலைபேசியில் தனிப் பட்டறையில் பேசிய பின்னர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் திரும்பிய அமைச்சர் சில்வா தாம் ஒதுக்கிய கல்லறையை மாநகர சபைக்கு அறிவித்துவிட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆங்கில இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் மாநகர ஆணையாளடம் தொடர்பு கொண்டு அமைச்சர் சில்வா கூறியது பற்றி கேட்டபோது, அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் காலமான அவரது தாயார் பற்றிய விடயம் ஒன்று குறித்து தம்முடன் பேசியதாகவும் அமைச்சர் தம்மைப்பற்றி எதுவும் பேசவில்லை என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அங்கு குழுமி இருந்தவர்கள் மத்தியில் சமுகமளித்திருந்த மயானத்தின் பிரதம காவலரை அழைத்த அமைச்சர் சில்வா மேர்வின் சில்வாவின் கல்லறையை ஞாபகத்தில் வைத்திருங்கள் என்று கூறியதுடன் தமது மரணத்தின் பின்னர், குறிப்பிட்ட அதே இடத்தில்தான் தமது பூதவுடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

கூடி நின்றவர்களை மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் தொடர்ந்து பேசிய அமைச்சர், முடியுமானால் இன்றைக்கே எனது பிரேதப் பெட்டியை நான் கொள்வனவு செய்திருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக அதனை வைத்திருப்பதற்கு எனது வீட்டில் இடவசதி போதாது என்றும் கூறினார்.

எவருக்கும் ஒரு நாள் இறப்பு வரும்.எதிர்காலத்தை எவருக்கும் நிர்ணயிக்க முடியாது. யாரும் பணம் வைத்திருக்கலாம். அதில் ஏதும் விசேடம் இல்லை.பணத்தினால் மரணத்தை தடுத்துவிட முடியாது. எனவே நானும் மரணத்திற்கு பயப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதன் பின்னர் பிரதம காவலருடன் தமது கல்லறைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்ற அமைச்சர் அந்த இடத்தை குறித்து வைப்பித்ததோடு மயான தொழிலாளர்களைக் கொண்டு அவ்விடத்தை சுத்தம் செய்வித்துக் கொண்டார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

அனாமதேய தொலைபேசி அழைப்பு தொடர்பான செய்தி வெறும் வதந்தி,புலிகளுக்கும் எந்த தொடர்புமில்லை.

Photobucketகையடக்கத் தொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புக்களைப் பெற்று அவர்களுடன் உரையாடும் போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நேற்று இரவு முதலாவதாக எமது தளம் தான் செய்தி வெளியிட்டிருந்தது.அனைத்து முன்னணி தளங்களும் இன்று காலை தொலைத்தொடர்பு ஆணைக்குழு வெளியிட்ட வதந்தி என்ற செய்தியை தான் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பதனை குறிப்பிட்டிருந்தோம் எமது செய்தியில்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது :

கையடக்கத் தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) அனுப்பப்பட்டது.

அக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ் சேவை (DD News) உறுதி செய்வதாகவும், இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது.

இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் விசாரித்ததுடன் தமது தொலை பேசிகளையும் நிறுத்தி வைத்தனர்.

இது தொடர்பாக “டயலொக்” நிறுவனம் எந்தச் செய்திகளையோ, குறுந் தகவல்களையோ வெளியிடவில்லை என்றும், இது மக்களைப் பீதியடையச் செய்ய சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியே என்றும் “டயலொக்” நிறுவனத்தின் யாழ். அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொய்யான குறுஞ்செய்தி பரப்பப்பட்டு வருகிறது – தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு

யாழ்ப்பாண குடாநாடு உட்பட்ட ஏனைய பகுதிகளில் பரப்பப்பட்டு வரும் குறுஞ்செய்திகள் பொய்யானவை என இலங்கை தகவல் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்து தொலைபேசி இலக்கங்களை தந்து அந்த இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளித்தால் மரணம் சம்பவிக்கும் என்ற அடிப்படையில்  இந்த குறுஞ்செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இது பொய்யானது என தெரிவித்துள்ள  தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஸ பெல்பிட்ட, இது இந்தியாவில் இருந்தே பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

இவ்வாறன வதந்தி பரப்பி தேவை இல்லாத அச்சத்தை உருவாக்குபவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.அதுமட்டுமில்லாமல் இப்படியான செய்திகளில் இந்தியாவின் சில பொய் பத்திரிகைகளின் பாணியில் புலிகளையும் இணைத்து கதைகட்டியுள்ளார்கள்.இது புலிகளின் பெயரை கெடுக்க நினைக்கும் சில விசமிகளின் செயல்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

அனாமதேய தொலைபேசி அழைப்பினால் 27பேர் பலி – புலிகளுக்கு தொடர்பா !! – அதிர்ச்சி தகவல்.

Photobucket

இந்தியா மற்றும் இலங்கையில் அனாமதேய அழைப்பினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கைத்தொலைபேசி திரையிலே சிவப்பு நிறத்தில் வரும் சில எண்களை கொண்ட அழைப்புக்களுக்கு பதிலளிக்கும் போது அதிலிருந்து வரும் அதீத மீடிறன் (frequency) காரணமாக மூளை பாதிக்கப்பட்டு இறப்பதாகவும் இது வரை 27 பேர் இறந்திருப்பதாகவும் DD1 தொலைக்காட்சி செய்தி உறுதிப்படுத்தியதாக இலங்கையின் பல பாகங்களிலும் பரவலாக பேசப்படுகிறது.

7888308001

9316048121

9876266211

9888854137

9876715587          ஆகிய இலக்கங்களில் இருந்து தான் அந்த அழைப்புக்கள் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் இது வெறும் வதந்தியா உண்மையா என்பது பற்றி onelanka செய்தியாளர்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை.விடுதலைப்புலிகளின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியடையும் இந்த வேளையில் இந்திய,இலங்கை அரசுகளை பழிவாங்க புலிகள் ஆரம்பித்துள்ள புதிய தாக்குதல் (cyber attack) இதுவாக இருக்கலாம் என்று வேறு சிலர் பேசிகொள்கிரார்கள்.உண்மை வெளிவரும் வரை மக்கள் விழிப்பாக இருக்கவும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய onelanka.tk வலைப்பக்கத்தை பார்க்கவும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 5 Comments »