ஏமாற்றிய எந்திரனும் நம்பிக்கையளிக்க வரும் ராஜஎந்திரனும் !

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

எந்திரன் மெகா ஹிட்… முதல் அறிக்கை!

இந்திய திரையுலகம் இதுவரை காணாத வெற்றியை எந்திரன் பெற்றுள்ளது. துபாயில் இன்று காலை வெளியான எந்திரன் முதல் காட்சி (7.30 மணிக்கு) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் “ரஜினி ரோபோ கெட்டப்பில் அசத்தியுள்ளார், இனி இந்தியாவில் எந்திரன் படம் போல் வருமா என்பது சந்தேகம்தான்” என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

“சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை… எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்… குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்”… இதுதான் எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் FIR. (முதல் தகவல் அறிக்கை).

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர். படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் கூறினார்.

அவர் கூறியதாவது :

“சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி – ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள். எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை. ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி – ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது. படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்…என்றார் அவர்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ.3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார். ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மலேசியாவில் ஆரம்பமாகியது எந்திரன் முன்பதிவு..

Photobucketமலேசியாவில் எந்திரன் படத்தின் முதல் காட்சியான Premier Show இற்கான முன்பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் திகதி இரவு  9.00 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவுள்ளது.இதற்க்கான மேலதிக தகவல்களை மலேசிய வாசகர்கள் மலேசிய நண்பன் பத்திரிகையில் அறிந்துகொள்ளமுடியும்.

இதுவரையில் இந்த Premier show பற்றிய தகவல் மற்றும் முன்பதிவு மட்டுமே
ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் மற்றைய காட்சிகள் மற்றும் திரையரங்கங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எந்திரன் முதல் காட்சிக்கான டிக்கட்டுகள் மலேசியா வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.ஒரு டிக்கட்டின் விலை RM60, RM70 .இந்த விலை கொடுத்து அதிக மக்கள் முதல் காட்சி பார்பார்களா என்பது சந்தேகமே!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

ஒரு ரஜினி ரசிகனின் பகிரங்க மடல்.

தயவு செய்து ஊடக நண்பர்கள் இதை பிரசுரித்து உதவவும்.

Photobucket

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே… சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, ‘தலைவா’ என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! ‘போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்’ என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!
இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், ‘உள்ளே வராதே’ என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்… கட்-அவுட் வேண்டும்… டிக்கெட் காசு வேண்டும்… நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்… உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே… தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்…… உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, ‘இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு’ என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன… மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது… நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை ‘குசேலன்’ படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, ‘என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.’ என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது ‘என்னாச்சு?’ என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி ‘எங்க பவர் புரியுதா?’ என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!
‘பாபா’ படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க… பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை… ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! ‘பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்’ என்றும் ‘நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்’ என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்… ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு ‘எந்திர’ இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 2 Comments »

எந்திரனை வெளிநாடுகளில் ஓடவைக்க போலிக்கண்ணீர் விட்ட ரஜனி!

Photobucket“சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கண்கலங்கினார்”.என்ற செய்தியை நேற்று ஊடகங்களில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்,பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பேசிய பேச்சை கேட்டு சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டாராம்.இது எவ்வளவு பெரிய கண்துடைப்பு வேலை என்று சிறுபிள்ளை கூட அறியும்.இவருக்கு கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு அந்த பேச்சில் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை.அப்படி இருக்க எப்படி இவருக்கு மட்டும் அழுகை வந்தது!

*என்ன ரஜனிக்கு அன்று தான் ஈழம் என்றால் என்ன என்று தெர்யுமா?

*ரஜனி ஈழப்பிரச்சனை பற்றி இது வரை ஒரு வரி கூட அறிந்திருக்கவில்லையா?

*இல்லை ரஜனி தொலைக்காட்சி,இணையம்,வானொலி,பத்திரிகை என்று எந்த ஊடகமும் பார்க்காத மனிதர்களுடன் கருத்துக்களை கூட பரிமாரிக்கொளாத ஒருவரா?

*இறுதியாக கொடூர போர் முடிந்து  ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட இந்த நிலையில் தான் ரஜனிக்கு கண்ணீர் வருகிறதா?ஏன் இவ்வளவு நாளும் அவரது ரோபோவுடன் சேர்ந்து வேறு கிரகத்திற்கு போயிருந்தாரா?

அவரது எந்திரனை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது ஈழதமிழர்களும் தான் இந்த வேலையில் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் படத்தை பார்க்க செய்ய இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கிறார்.இவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் இருந்த மரியாதையை கூட தானாக குறைத்துக்கொண்டுள்ளார்.அதைவேறு இந்த தமிழ்நாட்டு ஊதுகுழல் பத்திரிகைகள் ஓவர் பில்டப்புடன் பிரசுரிக்கிறார்கள்.ஈழத்தமிழர்கள் அரசியல்வாதிகள்,நடிகர்கள்,கட்சிகளின் பின்னால் பல்லக்கு தூக்கும் கேனை தமிழர்களல்ல என்பதை ரஜனி தெரிந்துகொள்ளவேண்டும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . Leave a Comment »