இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்கள் அதிகம்: ஐநா அறிக்கை

இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி மில்லியன் செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அபாரமான வளர்ச்சியை கண்டது.

கடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.

சர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐநா கூறி வருகிறது.

இதற்காக பல்வேறு வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் சுற்றுப்புற சுகாதாரத்துக்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை ஐநா வழங்கி வருகிறது.

உலகளவில் 110 கோடி மக்கள் முறையாக சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என ஐநா மதிப்பிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பூமியின் எல்லா மக்களுக்கும் சுகாதாரமான கழிவறைகள் கிடைக்க வேண்டும் என்பதே ஐநாவின் குறிக்கோள்.

ஆனால், இந்தியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், சுற்றுப்புற சுகாதாரத்தில் பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று ஐநா பல்கலைக்கழக இயக்குனர் ஸாபர் அடீல் தெரிவிக்கிறார்.

உலகின் பாதி மக்கள் தொகையினர் முழுமையான சுகாதார கழிவறைகளை பயன்படுத்துவதற்காக 2015ம் ஆண்டுக்குள 358 பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்க ஐநா முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

பான் கீ மூன் மகள் இந்தியரை திருமணம் முடித்திருக்கிறார்: மேலும் அதிர்சி

8 வது ஹிந்தி மாநாடு நியூயோர் நகரில் கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாடிய பான் கீ மூன் அவர்கள் தனது மகள் ஒரு இந்தியரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் தாம் புது டெல்லியில் தூதுவராகப் பணியாற்றியபோது விஜய் நம்பியார் தனக்கு மேலதிகாரியாகக் கடைமையாற்றியதாகவும், விஜய் நம்பியாரை தனக்கு 1972 ஆண்டு முதல் தெரியும் எனவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த மாநாடு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் பான் கீ மூன் உரையாற்றியதில் பல திடுக்கிடும் தகவல்கள் மறைந்திருப்பது தமிழர்களுக்குத் தெரியவில்லை.

இவர்கள் கென்யாவில் வாழும் பல இலங்கைத் தமிழர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. கொரிய தூதரகத்தில் முதல் முதலாக ஒரு ராஜதந்திரியாக பான் கீ மூன் பதவி ஏற்றபோது, அவரது ஆசானாக விஜய் நம்பியார் விளங்கியிருக்கிறார். ஐ.நாவில் ஒரு பொறுப்பதிகாரியாக விஜய் நம்பியார் கடமையாற்றி இருந்ததும் அவருக்கு கீழ் பான் கீ மூன் கடமையாற்றியதும் நடை பெற்ற மாநாட்டிலிருந்து வெளியாகியுள்ள செய்திகள்.

இறுதிச் சமரில் விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முயற்சிக்கும் போது அதன் ஏற்பாட்டாளர்களாக திகழ்ந்த முக்கிய நபர் விஜய் நம்பியார் என்பது யாவரும் அறிந்ததே. சரணடைய வரும் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று தெரிந்துமே நம்பியார், அவர்களை வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின் படி தாமே யுத்த களத்திற்குச் சென்று சரணடைவதைப் பார்வையிட இருப்பதாகவும் இவர் சிலரிடம் கூறியிருக்கிறார். இவர் தொடர்பாக பல முறைப்பாடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், விஜய் நம்பியாரும், பான் கீ மூனும் பாலிய சிநேகிதர்கள் என்ற விடயம் தற்போது அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிலை தெரியாமல் பல தமிழ் அமைப்புக்கள் விஜய் நம்பியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பான் கீ மூனை கோரிவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இதுவரை எந்த விசாரணையும் விஜய் நம்பியாருக்கு எதிராக நடத்தப்படவில்லை என்பதற்கு தற்போது தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பான் கீ மூனும் ஒரு இந்தியாவின் செல்லப் பிராணியே என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்துடன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் எவ்வளவு இதய சுத்தியுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகுவார் என்பது தற்போது மிகுந்த சந்தேகத்திற்கு இடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாநாட்டில் பான் கீ மூன் பல்லிளித்து பேசிய சில ஹிந்தி வார்த்தைகள் கீழே..

ஹிந்தி தோடா தோடா மாலும் ! அப்படி என்றால் எனக்கு ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் !

இதை விட நீண்ட வசனத்தையும் இவர் பேசிக்காட்டியிருக்கிறாராம் என்றால் பாருங்களேன் !

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »