சரத்குமார் இலங்கை சென்று ராஜபக்சேவை ரகசியமாக சந்தித்துவிட்டு வந்தாரா??- தமிழ்த்திரையுலகினர் அதிர்ச்சி

Photobucketஇலங்கையில் நடைபெற்ற திரைப்படவிழாவுக்கு இந்தியாவிலிருந்து யாரும் போய்க் கலந்துகொள்ளக்கூடாது என்று தென்னிந்தியத் திரைப்படக்கூட்டமைப்பு தடை விதித்ததையும் மீறிக்கலந்து கொண்ட விவேக்ஓபராய்,அசின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,இவர்கள் நடித்திருக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்கிற குரல்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன.

இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்களின்போது நடிகர்சங்கத்தின் தலைவராக இருக்கும் சரத்குமார்,தமிழ்உணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்ட இந்தக்குரல்களுக்கு எதிராகவே பேசி வந்தார்.அதற்கு, அவரும் அவருடைய மனைவி ராதிகாவும் இலங்கையில் செய்துவரும் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணமாக இருக்குமெனப் பலரும் சொன்னார்கள்.

இந்நிலையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு தகவல் தமிழ்த்திரையுலகினரின் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.அது என்னவென்றால்,சரத்குமாரும்,இன்னொரு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளரும் கொழும்பு சென்று ராஜபக்சேவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கின்றனர் என்பதுதான்.இந்தச் சந்திப்பு மிகவும் ரகசியமாகப் பேணப்பட்டுவருகிறது.

இவர்கள் எதற்காக அவரைச் சந்திக்க வேண்டும்?அங்கே பேசப்பட்ட விசயங்கள் என்ன என்பது இப்போது தெரியாவிட்டாலும்,இனிமேல் சரத்குமார் பேசுகிற பேச்சுகளைக் கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருக்கும் சரத்குமார் தமிழ் மக்களுக்கு எதிராக இப்படி அப்பட்டமாகச் செயல்படமாட்டார் என்கிற கருத்தும் நிலவுகிறது.இவற்றில் எது சரி என்பது போகப்போகத் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

‘நெட்டில்’ ஜக்குபாய்.. பார்க்க ஆளில்லை!!

Photobucketசரத்குமார் நடித்த ஜக்குபாய் திரைப்படம் இன்டர்நெட்டில் முழுசாக வெளியாகிவிட்டது. விஷயம் அறிந்து ஆடிப் போயுள்ளார் சரத். இதைவிட அவரை அதிர வைத்திருப்பது, இலவசமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தை மிகக் குறைந்த அளவிலான ரசிகர்கள்தான் இன்டர்நெட்டிலேயே பார்த்துள்ளார்கள் என்ற உண்மை! சரத்குமார் – ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜக்குபாய் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தார் சரத் குமார். ஆனால் படத்தின் பிஸினஸ் முழுவதுமாக முடியாத நிலையில் படத்தை வெளியிடுவது குறித்து எந்த முடிவுக்கும் வராமல் உள்ளார் சரத் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சரத்குமாரின் இந்தப் படம் இணையதளங்களில் முழுமையாக வெளியாகி விட்டது. பின்னணி இசை சேர்ப்புக்கு முந்தைய நிலையில் படம் இருந்தபோது யாரோ இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். இதனால் வெறும் வசனங்கள் மற்றும் காட்சிகள் மட்டுமே இணையத்தில் பார்க்க முடிகிறது. அதாவது குறைப் பிரவசத்தில் பிறந்த குழந்தை போல ஜக்குபாய் நெட்டில் உலா வந்து கொண்டுள்ளது. சரத்குமாரைப் பொறுத்தவரை, இந்தப் படம் மட்டுமே அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை. இன்னும் வெளிவராத இந்தப் புதுப்படம் இணையத்தில் வெளியானது அவருக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இதைவிட கொடுமை, இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் மிக மிகக் குறைவாக இருந்ததுதானாம். இணையத்தில் இலவசமாக வெளியாகியும் பார்க்க ஆளில்லை என்றால் மனசு கஷ்டமாகத் தானே இருக்கும்! இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார் சரத். நெட்டிலேயே இந்த நிலை, தியேட்டரில் எப்படி இருக்கப் போகிறதோ ரெஸ்பான்ஸ் ….!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »