பாதிக்ககப்பட்ட பெண்ணின் நேர்காணல் – சாருவின் காமவெறி பகுதி – 3

Charuwriter


கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர்.

நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், நிறைய வாசிக்க வேண்டும் என்ற அறிவுத் தேடலையும் குற்றமாக எந்த மனிதனாலும் கூற முடியாது. அந்த ஆர்வமே அப்பெண்ணிடம் மிகுதியாய் இருந்திருக்கிறது என்பதை அவருடன் பேசியதில் இருந்து உணர முடிகிறது. அப்படி இருக்க அவர் சந்தித்த பிரச்சனைதான் என்ன?

மீண்டும் படபடப்பாக பேச ஆரம்பிக்கிறார் அவர்.

“பேஸ்புக் வந்த பிறகு புதிய நட்புகளை ஏற்படுதிக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் மிக கவனமாக நட்புகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தேன். கவிதைகளை தொடக்கத்தில் பேஸ்புக் பக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். விருப்பத் தேர்வுகளாக சிலரிடம் இருந்து கருத்துக்கள் வந்த போது மகிழ்சியாக இருந்தது. எனது கவிதை ஒன்று ஓர் வார இதழில் வெளிவந்த போது கவிதைகள் எழுதும் ஆர்வமும் தீவிரமானது.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பிரபல எழுத்தாளர்கள் கூட இருக்கிறார்கள் என்று முகவரிகளை கொடுத்தார். சில எழுத்தாளர்கள் தளத்தில் வாசகியாக இணைந்து கொண்டேன். அப்படித்தான் சாரு நிவேதிதா வாசகர் குழுவில் இணைந்தேன். ஆனால் சாருநிவேதிதா படைப்புகள் எதையும் நான் வாசித்திருக்கவில்லை. இணையம் மூலமாகவே அவருடைய பெயர் பரிச்சியம் ஏற்பட்ட பின் அவரது வாசகர் வட்டத்தில் இணைந்தேன்.

முதன் முறையாக அவருடன் சாட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தொடக்க நிலையில் மரியாதையாகத் தான் பேசினார். சில நாட்களுக்கு பின் அவருடைய புத்தகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரிடம், “உங்கள் புத்தகம் எதையும் வாசித்ததில்லை” என்றேன். உடனே அவருடைய இணையதள முகவரியை கொடுத்தார். வீட்டு முகவரி கொடுத்தால் புத்தகம் அனுப்புவதாக கூறினார். சிறிது தயக்கமாய் இருந்தாலும் பிரபலமான ஒருவர் கேட்கிறாரே என்று வீட்டு விலாசத்தை கொடுத்தேன். கூடிய சீக்கிரம் புத்தகம் அனுப்புவதாக கூறினார். மேலும் சில நாட்களுக்கு பின் மிக உரிமையாக பேச ஆரம்பித்தார். ‘செல்லம்’, ‘கண்ணு’, ‘புஜ்ஜி’, ‘வாடா’, ‘போடா’ என ஆரம்பித்த போது மிகுந்த சங்கடமாக எனக்கு இருந்தாலும் எனது அப்பா வயதுடையவராக கருதியதால் ஏதோ அன்பாக பேசுகிறார் என்று பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சில நாட்களில் எனது கவிதைகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். அதனால் மேலும் நான் எழுதி இருந்த கவிதைகளை ஆர்வமாக அவருக்கு அனுப்பினேன். வாசித்துவிட்டு அருமையாக இருப்பதாக பாராட்டினார். என்னை குறித்து அவரது தளத்திலும் ஓர் கட்டுரை எழுதினார். இதன் தாக்கம் பின்னாலில் எப்படி இருக்கும் என்பதை அப்போது நான் உணரவில்லை.

அதற்கு பின் அவரோடு சாட் செய்த போது ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேச ஆரம்பித்தார். அதிர்ச்சியடைந்த நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் பயந்தேன். என்னுடைய சுபாவம் எனக்கு எடுத்தெரிந்து பேசும் தைரியத்தை கொடுக்கவில்லை. ஆனால் சில நண்பர்களிடம் இது குறித்து கூறினேன். பிறகுதான் சாருவின் படைப்புகள் குறித்தும் அவருடைய நடத்தைகள் குறித்தும் சில நண்பர்கள் எச்சரிக்கை செய்தார்கள். நான் தவறான இடத்தில் இருப்பதாக தோன்றியது. மேலும் சாரு நிவேதிதாவின் வாசகர் பேஜ் பக்கத்தில் நடக்கும் விவாதங்கள் ஆபாசமானதாகவும் இருந்ததால் இதில் இருந்து விலகி விட வேண்டும் என்று தோன்றியது. அதனால் சாட் மற்றும் வாசகர் வட்டத்தில் இருந்தும் விலகிக் கொண்டேன். இத்தோடு சாருவும் நிறுத்தி இருந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் பகுதியில் என்னை குறித்து நேரடியாக எழுதிய சில கருத்துக்களால் மனவுளைச்சல் ஏற்பட்டது. அவருடைய சில வாசகர்களும் மறைமுகமாய் என்னை தாக்கி எழுதினார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இணையத் தொடர்புகளில் இருந்து விலகி விடலாமா? என்று தோன்றியது.

சாரு வாசகர்களின் மறைமுகத் தாக்குதல்களையும் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சில நண்பர்கள், ‘இத்தோடு விட்டுவிடு. பிரச்சனையை வெளியே சொல்லாதே’ என்கிறார்கள். என்னால் முடியவில்லை. ஏன் இப்படி?  நான் என்ன தவறு செய்தேன்? எந்த குற்றமும் செய்யாத நான் ஏன் குற்றவுணர்ச்சியோடு இருக்க வேண்டும்.  இதற்கான பதில் தான் தற்போதைய தேடலாய் எனக்குள் இருக்கிறது. இனி நான் என்ன செய்வது? நீங்களே கூறுங்கள்” என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.

அவரின் தகவல்களை உறுதிபடுத்தும் நோக்கத்தோடு ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம். முதலாவதாக சாருவுடன் செய்த சாட் அனைத்தையும் நிதானமாய் வாசித்தோம்.

மே மாதம் 22.05.2011- இல் சாட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வாசகர்களில் ஒருவர் என்ற அறிமுகத்துடன் பெண் பதிவரின் அறிமுகம் செல்கிறது. சில நாட்கள் சாதாரண நலன் விசாரிப்புகளுடனே சாட் தகவல்கள் உள்ளன. மே 31-இல் சாருவின் அணுகுமுறை மாறி இருக்கிறது. ‘நீங்கள்’ என்கிற வார்த்தையில் இருந்து டா, செல்லம், கண்ணு போன்ற சொல்லாடல்களை உபயோகித்திருக்கிறார். உரையாடலில் பெண் பதிவரின் சங்கடப்படும் தொனிகள் தென்படுகின்றன. அதன் பின் ஜீன் 02.06.2011 அன்று நடைபெற்ற சாட்டில், “கனிமொழியிடம் (முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்) இருந்த காதலுக்கு பின் இப்போதுதான் உன்னைப் பார்க்கும் போது காதல் வருகிறது என்று குறிப்பிடுகிறார். அப்போது இப்பெண் பதிவரின் பதிலில் அதிருப்தியை பார்க்கிறோம். தன்னை வாசகியாகவே முன்னிருத்தி உரையாடலை முடிக்கிறார். அதற்கு பின் ஜீன் 12.06.2011 அன்று நடைப்பெற்ற சாட் உரையாடலில் சாரு மிக மோசமான பாலியல் கிளர்ச்சி வார்த்தைகளை உபயோகித்தது காணப்படுகிறது.

இவ்உரையாடலின் போதே தனது நண்பர்கள் பட்டிலில் இருந்து சாருவை நீக்கியதோடு வாசகர் குழுவில் இருந்தும் நீங்கிக் கொள்கிறார். ஆனால் சாரு அதே தேதியில் (ஜூன் 12) தனது வாசகர் பக்கத்தில் இப்பெண்ணை கேவலப்படுத்தி  எழுதுகிறார்.

மேற்குறிப்பிட்ட சாருவின் அயோக்கியத்தனமான பதிலை பாருங்கள். 23 நாட்கள் வாசகர் வட்டத்தில் இணைந்து, 13 முறை சாட் செய்து பேசிய பெண்ணை, ‘தனது நோக்கத்திற்கு இணங்கவில்லை என்றதும், அவள் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டாள் என்பதை அறிந்ததும் சாட்டுக்குள் நடத்திய ரவுசுளை மறந்துவிட்டு, யோக்கியவான் பொங்கி எழுந்து வாசகர்கள் மத்தியில் ‘போதனை’ செய்கிறார். இந்த அயோக்கியனின் யோக்கியதை ‘மைனர் குஞ்சு’ ரேஞ்சுக்கு இருக்க, பாதிக்கப்பட்ட பெண் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதும், இணையத்தில் இருந்து விலகிக் கொள்வதும்தான் நியாயமான செயலா? வாசகியாக அறிமுகமாகும் பெண்களிடம் சாட்டுக்குள்ளும், போனிலும் ‘காமரசம்’ போதிப்பதும், பாலியல் கிளர்ச்சியில் உளறுவதும்தான் சாருவின் யோக்கியதை என்றால் சாருவின் வாசகர்கள் அந்த கருமத்தை நியாயப்படுத்த முயல்வீர்களா?

இச் சம்பவத்தை முன்வைத்து சாருவுக்காக வக்காலத்து வாங்க வருபவர்கள் தங்கள் அம்மா, மனைவி, மகள்களை சாருவின் ஆன்லைனில் விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு இங்கே வாருங்கள்! காத்திருக்கிறோம்!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »

கனிமொழியையே ‘மடக்கிய’ சாரு முன் அந்தப்பெண் எம்மாத்திரம்? – சாருவின் காமவெறி பகுதி – 2

கனிமொழிக்கும் இவருக்கும் காதல் இருந்ததாம். கனிமொழியை தவிர இந்த சாரு வேறு எந்த பெண்ணையும் முத்தமிடவில்லையாம்.இவர்களது காதல் இருவரது கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்ததாம். அப்போ அதுக்கு பெயர் கள்ள தொடர்பு தானே !! கனிமொழியுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது என்று இந்த சாரு வெளிப்படையாக சொல்லியும் ஏன் தி.மு.க காரர்கள் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.

கனிமொழியின் அரசியல் தவறுகளை விமரிசிப்பது வேறு, அவர் பெண் என்பதினால் அவரை ராசாவுடன் தொடர்பு படுத்தி பேசுவது வேறு. இரண்டாவது பச்சையான வக்கிரம். ஆனால் இந்த வக்கிரத்தை உருவாக்கி ஒரு அரசியல் கலாச்சாரமாக மாற்றியது தி.மு.கதான் என்பதால் இப்போது அவர்களே அவர்கள் உருவாக்கிய சீரழிவுக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆனால் பொறுக்கி சாரு தான் கனிமொழியுடன் ஆழமான காதல் கொண்டிருந்தேன் என்று சொன்னதை என்னவென்று சொல்ல? இவ்வளவிற்கும் ஒரு கூட்டத்தில் கனிமொழி, சாரு தனது இலக்கிய தந்தை போல என்று வேறு பேசியிருக்கிறார். கனிமொழியின் அரசியல் பிரபலத்தை பயன்படுத்திக் கொண்ட சாரு தனது பொறுக்கித்தனத்தை நிலைநாட்ட கனிமொழி என்ற பெண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார்.

வலையுலகில் தி.மு.கவிற்காக வெக்க மானம் ரோசம் இல்லாமல் வேலை பார்க்கும் சிலதுகள் இதற்காகக் கூட சாருவை கண்டிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கட்சி விசுவாசத்தை விட பொறுக்கி விசுவாசம் அதிகம் என்று தோன்றுகிறது. இப்படி கனிமொழியையே வளைத்துப் போட்டவர் எனும் போது அந்த இளம் பெண் நிறைய பயந்திருக்கிறாள். இத்தகைய வலுவான மேலிட தொடர்பு கொண்ட பிரபலமான எழுத்தாளரை துண்டித்து விட்டு எப்படி வெளியேறுவது என்று அவள் யோசித்திருக்கிறாள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 6 Comments »

சாருவின் காமவெறி நடந்தது என்ன? – ஒரு அறிமுகம்! (பகுதி 1)

சாரு நிவேதிதாபடிப்பு முடித்த ஒரு இளம்பெண்.  வேலை பார்க்க வெளியே செல்ல முடியாத சூழ்நிலை, இணையம் மூலமாக சிறிய அளவில் டி.டி.பி போன்றதொரு வேலை  எடுத்து செய்பவள். கட்டுப்பெட்டியான குடும்ப வாழ்க்கையில் வெளியே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது இணையம். கணினிப் பெட்டியில் அந்தப்பெண் நேரம் செலவிடுவதை குடும்பத்தினரும் தடை செய்யவில்லை. கணினியில் பொழுதை செலவிடுவது வீட்டுச் சிறையை மீறுவதாக இல்லாததுதான் அந்த அனுமதிக்கு காரணம்.  இப்படித்தான் அவளது இணைய வாழ்க்கை தொடங்குகிறது.

ஆரம்பத்தில் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டும், பின்னர் முக நூலில் – பேஸ்புக்கில் – தனி கணக்கு ஒன்று ஆரம்பிக்கிறாள். சிறு கவிதைகளையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறாள். நட்பு வட்டம் விரிகிறது. பேஸ்புக்கில் சாருவின் வாசகர் வட்டம் அறிமுகமாகிறது , அதில் இணைந்து அங்கே கருத்துகளை எழுதுகிறாள். பெண் அதுவும் இளம்பெண் என்பதினாலேயே தான் இத்தனை சீக்கிரம் முகநூலில் பிரபலமாகியிருக்கிறோம் என்பதை அந்த பேதைப் பெண் உணர்ந்திருக்கவில்லை.

இதனால் அந்த பெண்ணோடு நட்புக் கொண்டவர்கள் அனைவரும் ஜொள்ளர்கள் என்று பொருளல்ல. ஆனால் பொது வெளியில் செயல்படும் ஒரு பெண் இந்த சமூக யதார்த்தத்தை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய அனுபவமோ, முதிர்ச்சியோ, வழிகாட்டலோ இல்லாததால் அந்தப்பெண் இதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள். அவள் ஒரு இளம்பெண் என்று வாசகருக்கு உணர்த்துப் பொருட்டே அர் விகுதி போடாமல் அள் விகுதி போட்டு எழுதுகிறோம்.

சாரு ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பது மட்டும் அதுவும் இணையத்தின் மூலம்தான் அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அவர் எழுதிய எதையும் அந்தப் பெண் படித்ததில்லை. பின்னர் சாரு அந்தப் பெண்ணின் ஒரு கவிதையைப் பாராட்டி தனது தளத்தில் வெளியிடுகிறார். மெல்ல மெல்ல உரையாடவும் செய்கிறார். இங்கும் அதன் ஸ்கீரீன் ஷாட் போட்டிருக்கிறோம். இந்த உரையாடல்கள் சாரு செய்தபவைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை ஊட்டி இந்த விசயத்தை வெளிவர முயற்சி செய்த தோழர் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்!

அந்தப் பெண்ணோடு வக்கிர உணர்வுடன் சாரு நடத்திய பொறுக்கித்தனத்தை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே இங்கு விசயமல்ல. இந்தப் பொறுக்கித்தனம் என்ன மாதிரி ஆரம்பித்து எங்கே சென்றது என்பதை பருண்மையாக ஆய்வு செய்தால்தான் அதன் விகாரத்தை உணர முடியும்.

இடையில் இந்த இலக்கியப் பொறுக்கிக்கு அடியாள் வேலை செய்யும் சில ஜென்மங்கள் அப்படி ஒரு பெண்ணே இல்லை என்று ஒரு பிரச்சாரத்தை கிளப்பி சாருவை காப்பாற்ற முனைகிறார்கள். இதில் துளியும் உண்மை இல்லை. தமிழச்சி உதவியுடன் நாம் அந்தப் பெண்ணுடன் பேசினோம். அவளது பேஸ்புக் கணக்கிற்குள் சென்று அனைத்தையும் பார்வையிட்டோம். இங்கும் சில ஆதாரங்கள் இணைத்திருக்கிறோம்.

மேலும் சிலர் அந்தப் பெண்தான் சாருவை மாட்டிவிட வேண்டும் என்று வலை விரித்ததாக அவதூறு செய்கிறார்கள். அதுவும் உண்மையல்ல. வலை விரித்தது அதாவது வக்கிரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முனைந்தது சாருதான்.

அந்தப் பெண்ணின் கவிதையை சாரு ஏன் பாராட்டி எழுத வேண்டும்? இது வழக்கமாக ஒரு பிரபலம் ஒரு புதிய எழுத்தாளரை அல்லது எழுத விரும்பும் ஒரு வாசகியை ஊக்குவிக்கும் செயல் அல்ல. சாருவின் மனதில் ஏதும் தெரியாத இந்தப் பெண்ணை ‘பயன்படுத்திக்’ கொள்ளவேண்டும் என்ற திட்டத்தோடு, வெகு சாமர்த்தியமாக அந்தப் பாராட்டை உள்நோக்கத்தோடு எழுதும் நோக்கம் இருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பெண் உலகப் புகழ்பெற்ற கவிதை எதையும் எழுதியிருக்கவில்லை.

அடுத்த பகுதியில் மிகுதி ஆதாரங்கள் இணைக்கப்படும்

தொடரும்…………

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

சாருநிவேதிதா காமலீலைகள் அம்பலம்!! (video)

சாருநிவேதிதா தெரியாதவர்கள் ஒரு சிலரே .இவர் எழுத்தாளராக மட்டுமில்லாமல் செக்ஸ் சாமியார் நித்யானந்தாவின் சீடராகவும் மக்களிடயே அறியப்பட்டவர்.குறிப்பிட்ட இந்த செய்தியினை நாம் பிரசுரிப்பதற்கு காரணம் சில பெண்கள் இவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்றும் வயது முதிர்ந்தவர் என்றும் மரியாதையாக பழக முற்பட்டு தமது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காகவே.

இன்று ஆன்லைன் சாட்டிங்கில் நட்பு மலர்வதை விட ஆபாசமே விளைகிறது.  இதில் பெரும்பாலான பெண்கள் வீழ்ந்தும் இருக்கின்றனர். இதில் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா ஒரு பெண்ணுடன் ஆபாச வார்த்தைகளால்  உரையாடிய சாட்டிங் ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.இணைப்புக்கள் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.இவர் மிகவும் கொச்சையாக நடந்துகொண்டது தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவரது வில்லங்க எழுத்துக்கு வாசகர் என்று சொல்லி கொள்ளுபவர்கள் இனியாவது திருந்துவார்களா?இவரை தமது அபிமான எழுத்தாளராக நினைத்து அவருடன் உரையாடிய/ உரையாடும் பெண்களின் நிலை என்ன என்பதை கீழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தெளிவாக உற்று நோக்கினால் இது போன்று பல பெண்களுடன் இவர் உல்லாசமாக இருந்ததை உணரமுடிகிறது.இந்த உரையாடலில் அவரே கூறுகிறார் 23 வயதான பெங்களூர் பெண்ணொருத்தி அவர்மூலமாக குழந்தை கூட பெற்றுக்கொள்ள விரும்பினாளாம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »