கூட்டணிக்குத் தயார்: விஜய்காந்த் அறிவிப்பு- கடவுளும் மக்களும் ‘கைவிட்டதால்’ இந்த முடிவு!

Photobucketகடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று இதுவரை ஓவராக வசனம் பேசி வந்த விஜய்காந்த், இப்போது கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்துள்ளார். தேமுதிக பொதுக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும், பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ”தமிழ்நாட்டில் ஜனநாயத்தை காப்பாற்ற மீண்டும் தர்ம யுத்தத்துக்கும், தியாகத்துக்கும் தேமுதிக தயாராக உள்ளது. ஜனநாயக மீட்பு போராட்டத்தில் உண்மையில் அக்கறை கொண்ட அரசியல் இயக்கங்கள் தேமுதிகவோடு இணைந்து செயல்பட முன் வருவார்கள் எனில் அதுபற்றி முடிவு எடுக்கவும் பேசவும் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் ஓரளவுக்கு நல்ல ஓட்டு வாங்கியும் சமீபத்திய சட்டமன்ற இடைத் தேர்தல்களில் டெபாசிட்டே பறிபோய் விட்டதால் அதிர்ச்சியடைந்த விஜய்காந்த், இன்று அக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை திடீரென்று கூட்டினார். அதிமுக போட்டியிடாத இடைத் தேர்தல்கள் தவிர இடைத் தேர்தல்களில் எல்லாமே தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட இப்போது அந்தக் கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து இனி கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்றும், கூட்டணி இல்லாமல் இனி டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் கட்சியினர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இவ்வாறாக கட்சியினர் மத்தியில் சலிப்பும், கட்சியை விட்டு தொண்டர்கள் வெளியேறுவதும் அதிகரித்துவிட்ட நிலையில், கட்சியின் பொதுக் குழுவை விஜயகாந்த் கூட்டினார்.

பொதுச் செயலாளரும் அவரே..

இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானத்தின்படி, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. அந்தப் பொறுப்பை கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூடுதலாக வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ராமு வசந்தன் மரணமடைந்த பிறகு அந்தப் பதவி காலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

புது சட்டசபை வளாகம் போல் அரங்கம்:

இன்றைய பொதுக் குழு கூட்டத்துக்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடந்தது. இங்கு தான் அதிமுக செயற்குழு-பொதுக் குழுக் கூட்டங்களும் நடப்பது வழக்கம்.

இன்றைய பொதுக் குழுவுக்காக அமைக்கப்பட்ட அரங்கம், புதிதாகக் கட்டப்பட்டு சட்டசபை வளாகம் போல் வ‌டிவமைக்கப்பட்டிருந்தது.

அதாவது விரைவில் புதிய சட்டசபை வளாகத்தி்ல் நமது ஆட்சியே நடக்கப் போகிறது என்ற நம்பி்க்கையை ஊட்டும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டதாம்.

செயற் குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்க, விஜயகாந்தி்ன் மனைவி பிரேமலதா, மச்சானும் மாநில இளைஞரணி செயலாளருமான சுதீஷ் உள்ளி்ட்ட 250 பேர் செயற்குழு, 2,700 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட்டணி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 23வது தீர்மானமே கூட்டத்தின் ஹை-லைட்டாகும்.

மற்ற முக்கிய தீர்மானங்கள்:

-தேர்தல்களில் பணத்தை வாரி இறைப்பதால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்கவும், ஆரோக்கியமான அரசியல் மீண்டும் தலை எடுக்கவும் அனைத்து தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்போம்.

-தமிழ்நாட்டை எக்காரணத்தை கொண்டும் பிரிக்க வேண்டும் என்று யார் குரல் எழுப்பினாலும் தேமுதிக முழு மூச்சுடன் எதிர்க்கும்.

-இலங்கை தமிழ் மக்கள் சிந்திய ரத்தமும் வடித்த கண்ணீரும் தமிழின விரோதிகளையும், துரோகிகளையும் அழிக்காமல் விடாது. இந்த போராட்டத்தை முறியடித்ததால் தமிழீழ கோரிக்கை இல்லாமல் போய்விடாது. தமிழ் ஈழ மக்கள் செய்துள்ள தியாகம் அளவு கடந்தது. அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு பொதுக்குழு ஆதரவை தெரிவிக்கிறது.

-இந்தியாவில் இந்தி மொழிக்கு தரப்படுவது போல் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

-கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

– மலேசியா, வளைகுடா நாடுகளில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்களின் குறைகளைக் களைய தூதர்களாக தமிழர்களையே நியமிக்க வேண்டும் ஆகியவை.

ஒதுங்கிய ரியல் எஸ்டேட் புள்ளிகள்:

தேமுதிகவை விஜய்காந்த் தொடங்கியபோது அதில் முக்கிய பதவிகளை பிடித்தவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏராளமாக பணம் பார்த்தவர்கள் தான். இதனால் முதல் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக பணத்தையும் செலவிவிட்டனர்.

ஆனால், பொருளாதார தேக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் படுத்துவிடவே கட்சியில் அவர்கள் அனைவருமே சைலண்ட் ஆகிவிட்டனர். இதனால் தான் இடைத் தேர்தல்களில் தேமுதிகவால் செலவும் செய்ய முடியவில்லை. பிரச்சாரமும் களை கட்டவில்லை.

மேலும் என்ன தான் செலவும் பிரச்சாரம் செய்தாலும் கூட்டணி இல்லாமல் தோல்வி உறுதி என்பதால் கட்சியினர் ஆர்வமாக செய்ல்படவும் இல்லை.

இந் நிலையில் தான் கூட்டணிக்குத் தயார் என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் விஜய்காந்த்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? : வரலாறு ஒருநாளும் வாழ்த்தாது:

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா?இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்ததாக ஜூனியர்  தனது வார இதழில் குறிப்பிட்டுள்ளது.

‘மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.

‘மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ‘அழுதால் கொஞ்சம் நிம்மதி’ என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காக அழுதாலும் அழுவது நல்லதுதான்.

ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், ‘விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை’ விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.

மகிந்த ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து.

ஒரு லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளை வழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம்.

2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய ‘மாவீரர் தின’ உரைகளில், ‘சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!’ என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், ‘ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்’ என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, ‘நெஞ்சுக்கு நீதி’ தேடுவதைத் தடுத்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, ‘நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்’ மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த ‘அமைதிப் படை’ நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று…?

சந்திரிகா குமாரதுங்கவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, ‘காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக’ தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.

ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் ‘ஜெய சுக்குறு’ (வெற்றி நிச்சயம்), ‘தீச்சுவாலை’ போன்ற மோசமான இராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன.

ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. ‘சமாதான தேவதை’ சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.

சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. ‘

சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா… போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!’ என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திர கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

‘ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது’ என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.

நோர்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பெப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையொப்பமிட்டார். பிரதமர் ரணில் கையொப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் – நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.

‘உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்’ என்றார் பிரபாகரன்.

ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.

கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்க, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசு பயன்படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.

இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கை இழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.

சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதியையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர்மையும், உண்மையான அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரினவாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் பொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் ‘சகோதர யுத்தம்’ குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்?

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா?

வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை?

அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய இரத்தக் குளியலுக்கு இரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?

சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன?Photobucket
‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன்.

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

நன்றி ஜூனியர் விகடன்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! – வைகோ கண்டனம்!

Photobucketதமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு. சீனா, பாகிஇதான், இஇரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.

ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கொடும் பழி துலீற்றி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (சுஹறு) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.

அது மட்டும் அல்ல, ‘பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார்.

இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார். ரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது. இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.’

‘தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார். அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்’ என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.

கருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றி நீட்டி முழக்கி இருக்கிறார். இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் துலீதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நுலீலில் எழுதி இருக்கிறாரே? டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு? அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான். கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.

காலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது. தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.

தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர் பெற்ற புகழை, இளங்கோ, கம்பன், கரிகாலன், இராஜராஜ

ன் பெற்ற புகழை, எங்கள் மாவீரன் பிரபாகரன் பெற்று இருக்கிறார். உலகமெலாம் வாழுகின்ற தமிழர்களின் இதயக்கோயிலிலே அவர் வீற்று இருக்கிறார். அவரை கருணாநிதி கொச்சைப் படுத்தி விட முடியாது. ஆனால், உண்மைகளைத் தமிழர்கள் அறிவார்கள். ஒரு அரசை நிறுவி, முப்படைகளை உருவாக்கி, அரசுத்துறைகளை அமைத்து இயக்கி, தமிழ் ஈழ அரசை உலகம் ஏற்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திய பிரபாகரன், போர்க்களத்திலும், ராஜதந்திரத்திலும் தன்னிகர் அற்ற தலைவராக விளங்குகிறார். ஒழுக்கத்தின் சிகரமாக, நேர்மைக்கும் சத்தியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்பவர். புரட்சிகளை நடத்திய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் உள்ளதை நான் படித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தவறுகளும் இல்லாத தலைவனான – மாவீரர் திலகமான பிரபாகரனைக் கொச்சைப்படுத்த முயல்கிறார் கலைஞர் கருணாநிதி.

2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்?

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது.

‘தாயகம்’ வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

வருங்கால சி.எம் விஜய்க்கு…

நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்…. சும்மா ஜிவ்வுன்னு சோக்காகீதுண்ணா… என்னைக்குன்னாச்சும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு.. என்ன தகுதி இல்லன்னா உனக்கு…? நல்லா டான்ஸ் ஆடுற, நல்லா பைட் போடற, நல்லா நக்கல்பண்ற, இரும்பு சட்டறகூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற… இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு..?. ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல… ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு… கொடநாட்ல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்னா அதுவும் ஓவர்.. புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடடேண்னே நீ.. தேர்தல்ல நீ நிக்கற… நாம ஜெயக்கறோம்…

எது கூட்டணியா…? என்ன பேசற நீ…? இல்ல கேக்கேன்… நீ ஒரு ஆளே ஒரு தேசிய கட்சிக்கு சமம்… உனக்கெதுக்கு கூட்டணி… உன் கெத்துக்கெல்லாம் நீ ஏண்ணா ராகுல போய் பார்க்கற…? அவரு வருவாரு பாரு… நம்பளை தேடி…

நானும் 3 நாளா யோசிச்சிட்டேன் உன்ன எந்த தொகுதில நிப்பாட்டலாம்னு… நீ எந்த தொகுதில நின்£லும் அன்னபோஸ்ட்டா ஜெயப்பங்கறது வரலாறு சொல்லும்… ஆனா, நம்ம ச.மு.க. கெத்த தமிழ்நாட்டுக்கு காட்டணுமா இல்லையா… (நம்ம கட்சி பேரு ச.மு.க.ன்னேன்… சந்து முன்னேற்ற கழகம்…)

நீ மத்திய சென்னைல நில்லு… ஏன்னு கேளு, சேப்டி மத்திய சென்னைதான். ஏதும் பிரச்சனைனா வீட்டுக்கு ஓடி வந்துடலாம்.. புலி உறுமுது பாட்ட தெருவுக்கு தெரு லவுட் ஸ்பீக்கர் வெச்சு போட்டம்னு வெச்சுக்க, பாட்ட கேட்டு மெரண்டு போய் ஓட்ட போட்ருவாங்கே… கண்ண மூடிகிட்டு ஜெய்ச்சிட்லாம். உங்கப்பா பிரசாரத்துக்கு வரணும்னுகூட அவசியம் கெடயாது… ஒரு பிரச்சனை முடிஞ்சிது… இப்போ தமிழ்நாட்டோட மத்த தொகுதிகள பத்தி பேசுவோம்… நாமக்கல்ல பேரரச நிப்பாட்றோம்… ரமணாவ பாபனாசத்துல, விக்ரமன உடுமலைபேட்டைல, என்னது கௌதம் மேனன்க்கா… என்ன பேசற நீ… அவர்லாம் ஒரு டைரக்டர்… ஆதி மாதிரி ஒரு நல்ல படம் எடுதுருக்காரா…? வேணா வெயிட் பண்ண சொல்லு அடுத்த எலெக்சன்ல பார்க்கலாம்… இப்போதைக்கு இந்த லிஸ்ட அன்னௌன்ஸ் பண்ணு… மிச்சத்த அப்புறம் ஷோபா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு முடிவெடுப்போம்…

இப்ப என்னோட பெரிய பயம் என்னன்ன லட்சிய திமுகவ என்ன பண்றதுனுதான். நமக்கு மிக பெரிய போட்டிய நான் அவங்ககிடேர்ந்து எதிர்பார்க்கறேன்.. ஒரு வோட்டுதான் வெச்சுருகாங்கன்னு நம்ம அலட்சியமா விட்ற கூடாது.. அந்தாளு மேடைக்கு மேடை அடுக்கு மொழில பேசி உன் இமே ஜ டேமேஜ் பண்ணிடுவாரு.. ஆக கடைசி பிரச்சனை திமுக?. நம்மல்லாம் பொறந்துட்டதுனால அரசியலுக்கு வந்துருக்கோம்.. ஆனா, அவங்கே அரசியல் பன்றதுகுன்னே பொறந்தவங்கே… அவங்ககிட்ட சின்னபுள்ள தனமா மோதுனோம்ன தடம் தெரியாம போட்ருவாங்கே… அதனால அத மட்டும் அறிவு பேராசான் திரு.அப்பா அவர்கள்ட்ட அறிவுரை கேட்டுக்குவோம்…

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… நம்ம ஆட்சிக்கு வந்தோம்ன்னா அந்த சொம்பு வந்து நம்மளோட சேர பார்ப்பாரு… ஆனா அவர சேத்துக்காத.. உன்ட்ட சொல்ல மறந்துட்டேன். அவரு போன படத்துல உன்ன கலாசிட்டாருங்ண்ணா… நான் குருவி இல்ல.. பில்லான்னு சொல்லிட்டாரு… அது சத்துக்கு அது எப்டின்னா உன்ன கலாய்க்கலாம். விடலாமா? அத… நசுக்கறோம்… அவரு மட்டும்தான்னா நமக்கு காண்டு… மத்த எல்லாரும் நல்ல பசங்க… இவர மட்டும் பாண்டி பஜார்ல கஞ்சா வித்தாருன்னு சொல்லி உள்ள தூக்கி போட்டு முட்டிய உடைச்சு விட்டறலாம்..

அண்ணோவ் நீ பார்லிமென்ட் கதவ வெல்டிங் மெஷின் வெச்சு தெறந்து காலால எட்டி உதைச்சு கதவ தொறந்து உள்ள போய் லாலுவ நக்கல் பண்ணிகிட்டே பாக்கு மெல்ரத பார்த்து இந்தியாவே மெரள போற நாள்க்காக காத்திருக்கேன்னா…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »