120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்

Photobucket

கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது. தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ். மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

என்னை 2 முறை கர்ப்பமாக்கினார் டைகர் உட்ஸ் -நடிகை தகவல்

டைகர் உட்ஸால் நான் இரண்டு முறை கர்ப்பமானேன் என்று கூறியுள்ளார் அவரது செக்ஸ் லீலைகளில் தொடர்புடைய ஆபாசப் பட நடிகை ஜோஸ்லின் ஜேம்ஸ். டைகர் உட்ஸ் கோல்ப் மட்டும் விளையாடாமல் செக்ஸ் ஆட்டத்திலும் சாம்பியனாக திகழ்ந்துள்ளார். அவருடன் தொடர்புப்படுத்தி ஏகப்பட்ட பெண்கள் பேசப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் உட்ஸ் குறித்த புதுத் தகவல் வெளியாகியபடியேதான் உள்ளது. இந்த நிலையில் 32 வயதான ஜோஸ்லின் ஜேம்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை, தன்னை உட்ஸ் 2 முறை கர்ப்பமாக்கியதாக கூறியுள்ளார். 2006 முதல் 2009 வரை உட்ஸும், ஜோஸ்லினும் நெருங்கிப் பழகினராம். இதுகுறித்து ஜோஸ்லின் கூறுகையில், 2007ல் முதல் முறையாக உட்ஸால் நான் கர்ப்பம் தரித்தேன். ஆனால் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. அந்த சமயத்தில்தான் உட்ஸின் மனைவி எலின் நார்டெக்ரனுக்கு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான் கர்ப்பமானதும், கரு கலைந்ததும் உட்ஸுக்குத் தெரியாது. பின்னர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் நான் உட்ஸால் கர்ப்பமானேன். இருபபினும் இதை நான் கலைத்து விட்டேன். இந்த சமயத்தில் தான் உட்ஸின் 2வது குழந்தையான சார்லி ஏக்செல் பிறந்தான். நான் கர்ப்பமான தகவலை உட்ஸுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. இதனால் அவரது சந்தோஷம் பாதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும். அதை நான் விரும்பவில்லை. இருப்பினும் இதை நிச்சயம் உட்ஸுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைச் சொல்ல நான் அவரை அணுகிய போது தான் கர்ப்பம் கலைந்து போனது. இதனால் சொல்லாமல் விட்டு விட்டேன். எலினுக்காக நான் பரிதாபப்படுகிறேன். அவருடைய தகுதிக்கு இது சரியல்ல தான். நிச்சயம் இப்படி ஒரு அவமானம் அவருக்கு வந்திருக்கக் கூடாது. நானும், உட்ஸும் பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பியதில்லை. ஒளிவுமறைவாக இருக்க விரும்பியதில்லை. அந்த சிந்தனையே எங்களுக்கு இருந்ததில்லை என்று கூறியுள்ளார் ஜோஸ்லின். இந்த நிலையில், டைகர் உட்ஸ், தனது செயல்கள் குறித்து நாளை முதல் முறையாக வெளிப்படையாக பேசவுள்ளாராம்.

செக்ஸ் லீலைகள் அம்பலமானதைத் தொடர்ந்து வீட்டோடு முடங்கினார் உட்ஸ். மேலும், செக்ஸ் தெரபிக்கும் உட்பட்டார் டைகர் உட்ஸ். அவரது செயல்பாடுகளால் வெறுத்துப் போன மனைவி எலின் வீட்டை விட்டு வெளியேறினார். விவாகரத்துக்கும் முடிவு செய்தார். இருப்பினும் தற்போது உட்ஸுடன் அவர் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் முறையாக வெளிப்படையாக பேசப் போகிறாராம் உட்ஸ். நாளை முற்பகல் 11 மணியளவில் புளோரிடாவின் பான்டே வேத்ரா கடற்கரையில் உள்ள டிபிசி சாகிராஸ் கிளப்ஹவுஸில் தனது நெருங்கிய நண்பர்கள், விளையாட்டுத் தோழர்களை அழைத்துள்ளாராம் உட்ஸ்.

அப்போது தனது கடந்த கால நிகழ்வுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து அவர்களிடம் விவரிக்கப் போகிறார். மேலும் தனது செயலுக்காக அவர் மன்னிப்பும் கேட்கவுள்ளதாக உட்ஸின் ஏஜென்ட் மார்க் ஸ்டீன்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது செயல்களைத் திருத்திக் கொண்டு விரைவில் வெளியுலகுக்கும் அவர் வரவுள்ளார் உட்ஸ் என்று மார்க் கூறியுள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »