பிள்ளையான் கட்சியின் தோல்விக்கு காரணம் அவர்களின் அடாவடித்தனமே -கருணா தெரிவிக்கிறார்

Photobucketஇடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் போட்டியிட்ட பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி படுதோல்வியை சந்தித்திருந்தது இ;க்கட்சியினரின் அடாவடித்தனங்கள் காரணமாகவே அவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். கருணா வன்முறை அரசியலை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளில்லை என்பதை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தோல்வி எடுத்துக் காட்டுகிறது என்றார். வடக்குகிழக்கு மாகாணங்களில் ஆளும் கட்சி பெரும் வெற்றியடைந்துள்ளது தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ள கருணா தாம் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கு கருத்து கூற மறுத்து விட்டார். போட்டியிட்டால் 1வாக்குக் கூடக் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் அவர் போட்டியிடவே இல்லை என பிள்ளையானின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கமோ தேசியப்பட்டியல் எம்பி பதவிகளை பட்டியலின் அடிப்படையிலேயே வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரு எம்பியாககூட இம்முறை கருணாவால் வரமுடியுமா? என்ற சந்தேகம் தோன்றுகிறது இந்நிலையில் இவர் அடாவடித்தனத்தை பற்றி பேசுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

பொய்ப் பரப்புரையில் ஈடுபடும் தமிழ்வின் இணையத்தளம்: முகுந்தன், ஜோன்சன் கண்டனம்


தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக்கூறும் “தமிழ்வின்” இணையத்தளம்,கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக,தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பிலிப்பையா ஜோன்சன் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களால் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில்,தமது அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும்,இதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் தமிழ்வின் இணையத்தளம் பொய்ப்பரப்புரையை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன்,மற்றும் பிலிப்பையா ஜோன்சன் ஆகியோர் கூட்டாகக் கூறியுள்ளனர்.

தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி விட்டார்கள் என்பது உட்பட,இவ்வாறான பல பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்,அதனையும் மீறி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு பெருகி வருவதால்,தமிழ்வின் இணையத்தளம் இவ்வாறான அடாவடித்தனமான பொய்ப் பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

உண்மையான ஊடக தர்மத்துடன் இந்த இணையத்தளம் இயங்கினால் இருவரிடமும் கருத்துக்கேட்டு அதனை உறுதி செய்திருக்க வேண்டும் என,இரண்டு வேட்பாளர்களும் கண்டனம் வெளியிட்டனர்.

கெளரிமுகுந்தனும்,ஜோன்சனும் பிளவுபட்டுள்ளதாகக் கூறும் தமிழ்வின் இணையத்தளம் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இணைந்திருக்கும் நிழற்படத்தை,தங்களுக்குத் தொியாமலே வெளியிட்டுள்ளமைதான் மிகவும் நகைப்பிற்கிடமான விடயமாகும்.

தமிழ்வின் லங்காசிறி போன்ற இணையத்தளங்களின் உரிமையாளரான சுவிசில் வசிக்கும் சிறிகுகனின் சகோதரரான சிறீதரன் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதால் ஒருபக்க செய்திகளையும் இவ்வாறான விசமப் பரப்புரைகளையும் அந்த இணையத்தளம் மேற்கொண்டு வருவதாகக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது

எதிர்வரும் சிறீலங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுவே எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற கட்டுரை உண்மைக்குப் புறம்பானது.

<!–

செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்
15.03.2010

கடந்த 14.03.2010 அன்று சில தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும். மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது. அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது.

மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒன்று இருந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.

திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்கு தமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன். வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.

புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.

கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.
இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல.

கடந்த 12.03.2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13.03.2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.

எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்


விளம்பரங்கள்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

“ஆண்மைத்தனமில்லாத, முகவரியற்ற தமிழ்த் தேசிய சிந்தனைச் சிதைவு எழுத்துக்களை ஊடகங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்!”

ஊடகங்களை ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று சொல்வார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும் பணியில் நேர்மையோடு பணியாற்றிய எத்தனையோ ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும், சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. தொடர்ந்தும் நடந்து வருகின்றன.

சிங்கள தேசத்தின் இனவாதத் தீயில் கருகிப்போன ஊடகவியலாளர்களையும் நாம் கண்ணீரோடு நினைவு கூரவேண்டிய கட்டாயத்திலும் தமிழீழ சமூகம் உள்ளது. நிமலராஜனில் ஆரம்பித்த இந்த ஊடகப் படுகொலைகள் நடேசன், சிவராமன் போன்ற பல தமிழூடக ஜம்பவான்கள் எனத் தொடர்ந்து, மகிந்த சகோதரர்களின் ஜனநாயக விரோத செயற்பாடுகளைக் கண்டித்த சண்டே லீடர் என்ற கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்கள ஊடகவியலாளரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிங்கள ஊடகவியலாளர்கள் பல ஊடகவியலாளர்கள் தமது உயிர்ப் பாதுகாப்பிற்காக சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளி நாடுகளில் வாழ்கிறார்கள். சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்ற மனச்சாட்சி மிக்க சில சிங்கள ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்திய தமிழ் இளைஞர்கள் படுகொலை குறித்த ஒளித் தகடே மகிந்த ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற சாட்சியாக மாறி அவர்களது தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது.

இத்னை பொறுப்பான ஊடகத் துறை தற்போது தடுமாறும் தமிழ் ஊடகவியலாளாகளால் சிதைவடைந்து வருவதை நாம் கவலையோடு சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளதை அனைத்து ஊடகங்களினதும், குறிப்பாக இணைய ஊடகங்களின் கவனத்திற்குத் தர வேண்டிய தார்மிகக் கடமையின் நிமித்தம் இந்தக் கட்டுரை பிரசுரமாகின்றது.

இலங்கைத் தீவு அமைதியாக இருந்த ஒரு காலத்தில், ‘தினகரன்’ பத்திரிகை யாழ்ப்பாணத்தில் கொடி கட்டிப் பறந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த தினகரன் விளையாட்டு விழாவின் சிறப்பு அந்தப் பத்திரிகையின் வரலாற்றைப் பதிவு செய்திருந்தது. அதே தினகரன் பத்திரிகை சிங்கள அரச தரப்பின் ஊதுகுழலாக மாற்றம் பெற்ற பின்னர் அதைக் கையில் தொடுவதற்கே ஈழத் தமிழர்கள் அருவருப்படைந்தனர்.

யாழ்ப்பாணத்துப் பத்திரிகை வாசகர்களில் பெரும் பகுதியினரை ‘ஈழநாடு’ பத்திரிகை வளைத்துப் பிடித்தபோதும், இரண்டாவது இடத்தில் இருந்த ‘வீரகேசரி’ முதல் இடத்தைப் பிடித்து வேகமாகத் தன்னைத் தமிழ் மக்கள் மத்தியில் பலப்படுத்திக் கொண்டது. இந்தியாவால் போஷாக்கு ஊட்டப்பட்டு, கொழும்பில் இருந்து வெளியிடப்பட்டு வந்தாலும், ஈழத் தமிழர்களின் நாடித் துடிப்பறிந்து நெருக்கடிகள் மத்தியிலும் பத்திரிகைத் தர்மத்தை ஓரளவாகினும் நேர்மையுடன் கடைப்பிடிக்கத் துணிந்த காரணத்தால், தற்போதுத் தனது இடத்தைத் தமிழ் மக்களது இதயங்களில் தக்க வைத்து வருகின்றது.

‘ஈழநாடு’ பத்திரிகை இந்திய, சிங்கள படையினரின் தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டதுடன், களநிலை சாதகமில்லாத நிலையில் அங்கு வெளிவருவது தடைபட்டுப் போக, புலம்பெயர் தேசங்கள் அந்தப் பெயரைச் சுவீகரித்து இன்றுவரை அதனை உயிர்ப்பித்து வருகின்றனர். இந்த இடையூறான காலப் பகுதியில் யாழ். மக்களுக்கான பத்திரிகையாக உருவான ‘உதயன்’ நாளிதழ் சிங்கள அரச பயங்கரவாதத்தினதும், தமிழ் ஒட்டுக் குழுக்களதும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களையும், இழப்புக்களையும் எதிர் கொண்ட போதும் இன்றுவரை தனது ஜளநாயகக் கடமையினைத் தொடர்வதாகவே உணரப்படுகின்றது.

‘உதயன்’ நாளிதழின் நிர்வாக இயக்குனர் திரு. சரவணபவன் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலும், அதன் ஆசிரியரும், நிர்வாக இயக்குனரின் மைத்துனருமான திரு. வித்தியாதரன் அவர்கள் பத்திரிகா தர்மத்தைப் பேணிவருவதாகவே நம்பப்படுகின்றது. ஆட்சி தம் கையில் கிடைத்துவிட்டது என்பதற்காக அரசியலாளர்களும், பதவி தம் கையில் கிடைத்துவிட்டது எனபதற்காக சட்டவாளர்களும் எப்படி ஜனநாயக கடமைகளிலிருந்து தவறுவதை மக்கள் (சிங்கள மக்களை இதில் சேர்க்க முடியவில்லை) அனுமதிக்க மாட்டார்களோ, அப்படியே ஊடகங்களும் தமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமைகளை மீறும்போது அதையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது மாறாத பட்சத்தில், அந்த ஊடகங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதையும் அத்தனை ஊடகங்களும் கவனத்தில் கொள்வது அதன் நிலைப்பிற்கு வகை செய்யும். தற்போது, இணைய ஊடகங்களில் வெளிவரும் உரிமை கோரப்படாத அல்லது முகவரியற்ற கட்டுரைகள் மக்களைக் குழப்புவதாகவே உள்ளது. ஆண்மைத்தனமில்லாத அந்த எழுத்துக்கள் ஊடக நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்பட வேண்டும். ஒருவர் சரியான கருத்தைத் தெரிவிப்பவராக இருந்தால், தனது கருத்து சரியானதுதான் என்ற எண்ணம் அவரிடத்தில் நிச்சயமாக இருந்தால், அவர் புலை பெயருக்குப் பின்னால் ஒளிந்திருந்தோ, அறியப்படாத அமைப்புக்களின் பெயரால் அறிக்கை விடுவதோ ஊடக தர்மமாக அமையாது.

ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்க விரும்பும் ஒருவர், அதனால் வரக்கூடிய எந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஆண்மைத்தனம் உள்ளவராக இருக்க வேண்டும். (தமிழீழ விடுதலைப் போரை நேரில் தரிசித்த எவரும் ஆண்மைத்தனம், பெண்மைத்தனம் என்று வீரத்தைப் பிரித்துணர முடியாது எனினும் வழக்கிலிருக்கும் வார்த்தையாகவே இந்தச் சொல் கையாடப்படுகின்றது) அதைப் பிரசுரம் செய்யும் ஊடகங்களும் அத்தகைய தவறுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

அண்மைக் காலங்களில் பெருகிவரும் இணையத்தளத் தொழில் நுட்ப வளர்ச்சி எம்மில் சிலருக்கு ‘மஞ்சள் பத்திரிகை’ வடிவங்களை உருவாக்கி உலாவ விடும் தைரியத்தையும் கொடுத்துள்ளது. அத்தகைய இணையத்தளங்கள் யாரைப்பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம். அந்த இணையத்தளம் யாரால் இயக்கப்படுகிறது என்பதற்கான உரிமை விபரங்களும் அதில் வெளியிடப்படுவதில்லை.

அண்மைக் காலமாக வெளிவரும் உரிமைகோரப்படாத இணைய ஊடகங்களைப் பார்வையிட்டபோது இந்த அதிர்ச்சிகளை உணர முடிந்தது. முன்பெல்லாம் அசிங்கங்களையும், தனிநபர் தாக்குதல்களையும் ரசிப்பவர்கள் ஒட்டுக் குழுக்களின் இணையத் தளங்களைப் பார்த்தோ, ரி.பி.சி. போன்ற வானொலிகளையோ கேட்டோ தங்கள் வக்கிரகங்களைத் தணித்துக் கொள்வார்கள். தற்போது அந்தப் பஞ்சங்கள் போக்க இப்படியான புதிய இணையத்தளங்களும் செய்தி வக்கிரகாரர்களுக்கு நிறையவே தீனி போட்டு வருகின்றன.

தவறு செய்பவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல, தவறைத் தட்டிக் கேட்கும், திருத்தும் கடமையிலிருக்கும், தகுதியிலிருக்கும் அனைவரும் தமக்கான கடமைகளை நிறைவேற்றத் தவறுவார்களானால் அவர்களும் குற்றவாளிகளே. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிக் கணங்கள் வரை உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தேசிய ஊடகமாகப் பணியாற்றிக்கொண்டிருந்த ‘தமிழ்நாதம்’, ‘புதினம்’ போன்ற ஊடகங்கள் பின்னால் ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள் காரணமாக இடை நிறுத்தப்பட்டதில் அதற்குரியவர்கள் பெரும் வரலாற்றுத் தவறைச் செய்தவர்களாகவே தமிழ் மக்களால் நோக்கப்படுகின்றது.

குறைந்தபட்சம், அதை நேர்மையோடு தமிழ்த் தேசியத்திற்காக செயல்படுத்த விரும்புபவர்களிடமாவது கையளித்து இருக்கலாம் என்ற ஆதங்கம் அத்தனை தமிழர்களிடமும் உள்ளது. ஊடகம் ஒன்று உருவாகுவதற்கு ஒருவர் அல்லது சிலர் காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அது மக்களிடம் சென்றடைந்த பின்னர் அது மக்கள் பயன்பாட்டிற்கான மக்கள் சொத்தாகவே நோக்கப்பட வேண்டும். அதைத் தடுக்கும், நிறுத்தும் முடிவுகளை எடுக்குமுன்னர் மக்கள் அபிப்பிராயங்களையும் கேட்டே முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை இது சம்மந்தப்பட்ட அனைவரும் உணர்வார்கள் என்றே நம்புகின்றோம்.

‘தமிழ்நாதம்’, ‘புதினம்’ இணையத்தளங்களின் மூடுவிழாவிற்குப் பின்னர், ரஷ்யா சிதறுண்டு போனபின்னர் உலகின் கேள்வி கேட்க முடியாத சக்தியாக அமெரிக்கா வளர்ந்தது போலவே ‘லங்காசிறி’ இணையத்தளமும் ஏகபோக உரிமையுடன் பெரு வளர்ச்சி கண்டது. அபாரமான அதன் வளர்ச்சி தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய கவர்ச்சி அதன் செய்திகளின் நடுநிலையிலும் வெளிப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்நின்று செய்திகளை வழங்கி ஈழத் தமிழர்களின் இதயங்களையும் வென்றெடுத்தது.

அதன் அபரிதமான வளர்ச்சிக்கு கண்திருஷ்டி வந்தது போலவே, சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கே வந்துள்ளது. ‘லங்காசிறி’ இணையத்தளம் இந்தத் தேர்தலில் தவிர்க்க முடியாத ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய உறவுமுறை அழுத்தம் அதன் நடுநிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதன் இயக்குனரின் சகோதரரான சிவஞானம் சிறிதரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் பக்கசார்பு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

புலம்பெயர் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் வழங்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நிலை குறித்த விசனக் கட்டுரைகள் ‘லங்காசிறி’ இணையத்தளத்தால் திட்டமிட்டு தணிக்கை செய்யப்படுகிறது. பிரசுரமாகாமல் தடுக்கப்படுகிறது. இது ஊடக தர்மம் என்று அந்த இணையத்தளம் கருதுமானால் காலம் அதனைத் தண்டிக்கும் என்பதை வரலாறு எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அவலப்பட்டு, நொந்துபோயுள்ள ஈழத் தமிழ் மக்களை உறவின் பெயரால் அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வது அபாயகரமானது. நியாயமான அச்சங்கள் தீர்க்கப்பட வேண்டும். கேள்விகளுக்குப் பதில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

அதை விடுத்து அச்சங்களையும், கேள்விகளையும் மறைத்து விடுவது, அந்த நீதிக்காகப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை இணையத்தளம்அந்தமக்கள் மத்தியில் இயல்பாகவே உருவாகிவிடும். இது தனி நபர்கள் மீதான குற்றச்சாட்டு என்றோ, அச்சுறுத்தல் என்றோ உதாசீனம் செய்யாமல் ஊடக தர்மத்தோடு சீர் செய்ய வேண்டியது அனைத்து ஊடகங்களின் கடமை என்பதால் இந்தக் கட்டுரை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்படுகின்றது.

இந்தத் தகவல்களை மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்வீர்களானால், தமிழ் ஊடகங்களைத் தூய்மைப்படுத்தும் பணியின் பயன் உங்களுக்கும் வந்து சேரும்.

«நாங்கள் வீழ மாட்டோம்! நீங்கள் வீழ விடவும் மாட்டோம்!!»

அன்புடன்

சி. பாலச்சந்திரன்

ஆசிரியர் – ஈழநாடு

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . Leave a Comment »