வெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா

Photobucketபல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இன்று காலை களனி- கிரிபத்கொடையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து தலைக்குää வயிற்றுக்கு, உடம்புக்கு என மருந்து கொடுப்பதைப் போலவே எனக்கும் கொடுக்கத் தெரியும். அதே போலி வெறிநாய்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து என்னவென்பது குறித்து எனக்கு மட்டுமே தெரியும். தேவையானவர்கள் களனிக்கு வாருங்கள். போதாதற்கு களனி கங்கையும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக களனி பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த பிரதியமைச்சர், அதற்கான ஆதரவை வழங்க தான் என்றும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

அதிர்ச்சி தகவல்- மேவின் சில்வா பதவியில் இருந்து நீக்கம்

Photobucket” சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கௌரவ அமைச்சர் மேவின் சில்வாவை பிரதி அமைச்சர் பதவியில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீக்கியுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மேவின் சில்வாவின் கட்சி உறுப்புரிமையை நீக்கியுள்ளது.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்திலேயே இந்த முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி அதிகாரி மீது அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது. அனைவராலும் கண்டிக்கப்பட்ட சம்பவமாக இருந்தது.

இதனையடுத்தே கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.எனது பொறுமைக்கு எல்லையுண்டு! இனி தவறு செய்தால் வெற்றிலை வழங்கப்படும்.-மேர்வின் சில்வா

தமது பொறுமைக்கு ஓர் எல்லை இருப்பதாக தெரிவித்துள்ள மேர்வின் சில்வா, தாம் பொறுமை இழந்தால் பதவி அதிகாரங்களை பொருட்படுத்தாது கடுமையான நடவடிக்கை எடுக்க அஞ்சப் போவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது பொறுமைக்கு ஓர் எல்லை இருப்பதாக பிரதி பெருந்தெருக்கள் அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்.

சமுர்த்தி அதிகாரிகள் தேவையற்ற வகையில் தமக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாம் பொறுமை இழந்தால் பதவி அதிகாரங்களை பொருட்படுத்தாது கடுயைமான நடவடிக்கை எடுக்க அஞ்சப் போவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த விஹாரைகளில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் காணப்படுகின்றனவா என்பது குறித்து ஆராயும் கண்காணிப்பு பயணமொன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோட்பாட்டை மாற்றிக்கொண்டதாக மேர்வின் கூறுகிறார்.

தாம் இனி தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க போவதில்லை என பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா உறுதியளித்துள்ளார்.

சமுர்த்தி ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்யதியாளர் சந்திபில் உரையாற்றிய பிரதி அமைச்சர், தண்டனை வழங்குவதற்கு பதிலாக, வேறுவகையான முறைமைகளை கடைபிடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில், தமது அமைச்சின் கீழ் வேலை செய்யும் யாரேனும் தவறு செய்வார்களாக இருந்தால், வெற்றிலையை கொடுத்து நீங்கள் தவறு செய்யவில்லை தானே இந்த  வெற்றிலையை பிடியுங்கள் என கூற தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் யாரேனும் வந்து அரச சேவையாளர்கள் செய்கின்ற தவறு தொடர்பில் தம்மிடம் முறையிட்டால், அவர்களுக்கு வெற்றிலை வழங்கி, அதனை குறித்த அதிகாரிகளுக்கு வழங்க செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

சமுர்த்தி உத்தியோகத்தரை மாடு போல் மரத்தில் கட்டிவைத்த அமைச்சர் மேர்வின் சில்வா……சொன்னதை செய்து காட்டினார் .- படம் இணைப்பு.

Photobucket
Photobucket

பிரதி அமைச்சர் மேவின் சில்வா, அரச பணியாளரான சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரம் ஒன்றில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான களனி பிரதேச சபை மைதானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டம், ஒன்று தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக அமைச்சர் ஐந்து அதிகாரிகளை அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் அதில் நான்கு அதிகாரிகளே வந்திருந்தனர். ஒருவர் வருகை தரவில்லை.

இதனையடுத்து அவரை அழைத்த அமைச்சர் மேவின் சில்வா, அவரை மரம் ஒன்றில் கட்டி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவை கேட்டபோது, குறித்த அதிகாரி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலுக்கு வராமை காரணமாக மக்கள் கோபமடைந்திருந்தனர்.

இந்தநிலையில் தம்மால் அழைக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரை பொதுமக்கள் தாக்கி காயப்படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தினாலேயே அவரின் பாதுகாப்பு கருதி அவரை மரம் ஒன்றில் கட்டிவைத்ததாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

இலங்கையில் யாரும் டெங்கு நோயால் தாக்கப்பட அனுமதிக்க மாட்டேன் – அமைச்சர் மேர்வின் சில்வா

நாடு முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள டெங்கு நோயைத் தடுக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் களனிப் பகுதியில் பங்கு கொள்ளாத அரசாங்க அதிகாரிகள் குழுவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களுக்குத் தண்டனை கொடுக்க உள்ளதாக பிரதியமைச்சர் மெர்வில் சில்வா தெரிவித்துள்ளார். இந்த அதிகாரிகளைத் தாம் இன்று பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தவுள்ளதாகவும் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

“இந்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். இதில் பொதுமக்களை ஈடுபடுத்துவேன். ஏனெனில் அந்த அதிகாரிகள் டெங்கு நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தமது கடமையில் இருந்து விலகிவிட்டார்கள்” என்றார் மெர்வின் சில்வா. களனி பகுதியில் சிறுவர்களே டெங்கு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அப்பகுதியில் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர் டெங்கு நோயால் எவரும் தாக்கப்பட அனுமதிக்க மாட்டேன் என்று மெர்வின் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »