பார்ப்பனனுக்கு பெண் கொடுக்க ஆளில்லை !!

Watch the video from 9minute

ஒரு காலத்தில் தம்மை தாமே உயர்ந்த சாதி என்று சொல்லிகொண்டிருந்த பார்ப்பனர்களை கட்டுவதற்கு இன்று அவர்களது குல பெண்களே விரும்புவதில்லை.இது தான் உண்மை நிலைமை.இன்னும் ஜாதியை தூக்கி பிடிக்கும் மூடர்கள் தமக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க கூடாது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் பெரியார்தாசன்!

periyardasan200பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார். இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது” என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார். பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »