சுறா செத்துபோச்சு..

Photobucketஒரு டிக்கெட் பத்து வெள்ளி..நான் என் பிரெண்ட்ஸ் பத்து பேர என் செலவுல என் இளைய தளபதியோட அம்பதாவது படம்னு குஷில டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போனேன்…மொத்தம் நூறு வெள்ளி..ஊரு காசுக்கு கிட்டத்தட்ட மூவாயரத்து ஐநூறு ரூவாய்…நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு…ஊர்ல ரெண்டு குடும்பம் வயறு நெறைய ஒரு மாசம் புல்லா சாப்டலாம்…அட நான் என் காசு போனத கூட பெருசா நெனைக்கல…ஆனா விஜய் மேல இவ்ளோ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெச்சு படத்துக்கு ஆர்வமா வந்த ஒரு நேர்மையான ரசிகனா விஜய்கிட்டயும் இந்த படத்தோட டைரேக்டர்கிட்டையும் சில கேள்விகள் கேக்கணும்… !

விஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி சூ…துல வெச்சிருந்தீங்களா..உங்கள நம்பி நான் குடுத்த காசுக்கு நீங்க எனக்கு திரும்பி குடுத்து என்ன தெரியுமா..ஒத்த தலைவலியும், டேய் இவன் விஜய் ரசிகன்டானு சுத்தி இருகவங்ககிட்ட அவமானமும்தான்…இப்ப சொல்றேன்..வெளியூர்க்காரன் இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்…உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு…எக்கேடோ கெட்டு போங்க..நீங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல…!

டைரெக்டர் திரு ராஜ்குமார் சார்…நீங்க மனுசனா சார்…இளைய தளபதியோட அம்பதாவது படம்..என்னை மாதிரி விஜய் ரசிகன்லாம் இந்த படத்த எவ்ளோ எதிர்பார்த்து வெயிட் பண்ணிருபாங்கன்னு உங்களுக்கு தெரியுமா… என்ன சார் படத்த எடுக்க சொன்ன மயிர புடுங்கி வெச்சிருக்கீங்க…உனக்கு சினிமா எடுக்க வருதுன்னு எந்த நாய் சொன்னான் உங்ககிட்ட…ஏன் இப்டி படம் எடுத்து படம் பார்க்க வர்றவன் தாலிய அறுக்கறீங்க…தயவு செஞ்சு போயிருங்க…உங்களோட இன்னொரு படத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க…மறுபடியும் சொல்றேன்…நீங்க சூடு சொரணை உள்ள மனுசனா இருந்தா சினிமா இண்டஸ்ட்ரிய விட்ருங்க…!

மக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும் வெளியூர்க்காரன் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்…என்ன மன்னிச்சிருங்க…!

என்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..ஆனா,விஜய்னா பெரிய மயிருல்ல..அதான் எடுத்து நடிசிருகாப்ள…போங்க..போய் பார்த்து நாசமா போங்க…!

நொந்து போன மனதுடன்…!

நன்றி வெளியூர்க்காரன்

this review taken from வெளியூர்க்காரன்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

நித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு!

நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English

இந் நிலையில் இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ராம்நகர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பெண்கள் சிறையில் நித்யானந்தா அடைப்பு:
அவரை மே 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதின்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமநகர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நித்யானந்தா அங்கு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் பெண் கைதிகள் இல்லாததால் அவரை அங்கு அடைத்தனர்.

நான் ஆண் அல்ல..:

முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்த நித்யானந்தா, நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் எப்படி யாரையும் கற்பழிக்க முடியும் என்று கேட்டு கூறி அதிர்ச்சி தந்தார்.
இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால், அவரது பாஸ்போர்ட்டில் அவர் ஆண் கூறியுள்ளதையும், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளதாலும் ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டுவிட்டனர்.
இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆசிரமத்தில் சந்தனக் கட்டைகளை வைத்திருந்ததாக தாக்கலான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் தந்துள்ளது.
இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.டியில் இருப்பது நித்யானந்தா தான்-ஆய்வுக்கூடம்:
இதற்கிடையே நித்யானந்தாவிடம் விசாரணை நடத்தி வரும் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் பிடுதி ஆசிரமத்தில் இருந்து 36 வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்திருந்தனர்.
அதில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், விசாரணையின்போது, ரஞ்சிதா மற்றும் இந்த சிடிக்களில் இருப்பது நான் இல்லை நித்யானந்தா கூறினார்.
இதையடுத்து இந்த சி.டிக்கள் ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 4 நாட்களாக அங்கு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை இன்று பெங்களூர் போலீசார் கைக்கு வந்து சேர்ந்தது.
அதில், 35 வீடியோ காட்சிகளிலும் இருப்பது நித்யானந்தா தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சியில் தோன்றுவதும் நித்யானந்தா என்று ஆய்வகம் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

நான் ஆம்பிளையே இல்லை : சாமியார் நித்யானந்தா கதறல்[i’m not a man, Nityananda told CID sleuths]

‘நான் ஆண் மகனே இல்லை. யாரோ செய்த சதியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்’ என்று போலீஸ் விசாரணையில் சாமியார் நித்யானந்தா கதறி அழுதார் You might also like நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியான பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. அன்னிய செலாவணி மோசடி, தங்கம் கடத்தல் போன்ற புதிய குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால், அவருக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. 5 பெண்களுடன் தொடர்பு: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதாவுடன் மட்டுமின்றி மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்துள்ளன. சாமியாரிடம் விசாரணை நடத்தும் சி.ஐ.டி. குழுவுக்கு தலைமை வகிக்கும் எஸ்.பி. யோகப்பாவும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘‘பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, நித்யானந்தா 5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி.க்களை கைப்பற்றினோம். அவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதித்தோம். அது உண்மையான சி.டி.க்கள்தான் என உறுதியாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்கள் யார் என்று தெரிய வேண்டும்’’ என்று அவர் கூறினார். ஆண் மகன் இல்லை: நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை துருவித் துருவி விசாரணை நடத்தினர். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என்று வழக்கமான பாணியில் நேற்றும் அவர் கூறியதால் பொறுமை இழந்த போலீசார், விசாரணை முறையை சிறிது மாற்றி உள்ளனர். அதை சமாளிக்க முடியாத சாமியார், ‘நான் ஆம்பிளையே இல்லை… பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும்? போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்’ என்று குரல் தழுதழுத்தப்படி கூறியுள்ளார். அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், பெங்களூரில் உள்ள 4 மருத்துவமனைகளிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ராம் நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இப்போது போலீஸ் காவலில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பாக வனத்துறை தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார். ரஞ்சிதா வரவில்லை : நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் நடிகை ரஞ்சிதா, சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று மாலை வரை அவர் வரவில்லை. ரஞ்சிதா மற்றும் அவருடைய தந்தையின் செல்போன் எண்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி. போலீசார் அவற்றில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தன

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்

மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.சவுதி அரேபியாவில், கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான முதியவர் ஒருவரை, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த சிறுமி, தனது கணவரை விட்டு பிரிந்து, தன் வீட்டுக்கு வந்து விட்டார். முதியவரிடமிருந்து, விவகாரத்தும் பெறப்பட்டு விட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து, பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, சவுதி அரேபியாவில் வலுத்து வருகிறது. கடந்த 2005ல் சவுதி மன்னர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையமும், இதே கருத்தை தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக அதிகரித்து, அதை சட்டமாக்க, சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மூன்று கமிட்டிகளை அரசு அமைத்துள்ளது.

இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள், குழந்தை நல மருத்துவர், மத அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில், இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியாவிலுள்ள ஒரு தரப்பினர்,’பல ஆண்டுகளுக்கு முன், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. தற்போது இதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்கின்றனர்.சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அல்-மனே கூறுகையில், ‘பழங்காலத்திலிருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு’ என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

13 வயது சிறுமியை திருமணம் செய்த நைஜீரிய செனட்டருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Photobucket

நைஜீரியாவில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட செனட்டர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த செனட்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நைஜீரிய பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 49 வயதான அஹமட் சானி யர்மியா என்ற செனட்டரே இவ்வாறு 13 வயது சிறுமி ஒருவரை அண்மையில் தலைநகர் அபுஜாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியையே குறித்த செனட்டர் கரம் பற்றியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண் செனட்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த திருமணம் தொடர்பில் நைஜீரிய மனித உரிமை அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இந்த திருமண வைபவம் குறித்து குறித்த செனட்டர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

குறித்த எகிப்திய சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக அஹமட் சானி யர்மியா என்ற செனட்டர் சிறுமியின் குடும்பத்தாருக்கு வரதட்சணை வழங்கியுள்ளதாக பெண் செனட்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2003ம் ஆண்டு சிறுவர் உரிமைகளை மீறும் வகையில் சானி செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டில் குறித்த அதே செனட்டர் 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்திருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

மிருகக்காட்சிச்சாலை மனித குரங்கு பசில் ராஜபக்சவின் கன்னத்தில் அறைந்தது

Photobucket

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவை இன்று தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் உள்ள மனித குரங்கு ஒன்று கன்னத்தில் அறைந்துள்ளது.

மிருக காட்சிச்சாலைக்கு இன்று சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, குரங்கின் கையை குலுக்க முற்பட்ட வேளையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக பசில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

குரங்கினை அவருக்கு அருகில் கொண்டு வந்த வேளையிலேயே அது அவரது கன்னத்தில் தாக்கியுள்ளது

அதன் பின்னர் குரங்கு அங்கிருந்த உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

பட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா!

Photobucket

தமிழ், தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். லண்டன், திருரங்கா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் அங்கிதா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஆனாலும் இரு மொழிகளிலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை. தமிழ் பட தயாரிப்பாளர்கள், கதாநாயகர்களுக்கு தூது அனுப்பி சான்ஸ் கேட்டார். தெலுங்கில் பார்ட்டி கூட கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் பலனில்லை.

லெஸ்பியன் கேரக்டர்கள், அரை நிர்வாணக் காட்சிகள் என வேறு திசையில் பயணிக்கத் துவங்கியுள்ளது தென்னிந்திய திரையுலகமும். இனியும் காத்திருந்தால், வேலைக்கு ஆகாது என்பது புரிந்ததால், இப்போது விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில் காமசூத்ரா விளம்பரமும் ஒன்று. ஆணுறைக்கான இந்த விளம்பரத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் அங்கிதா.

இந்த விளம்பரங்களுக்குப் பிறகு ஐட்டம் டான்ஸ், கேரக்டர் ரோல் என்றாலும் பரவாயில்லை, ஒப்புக் கொள்கிறேன் என்றும்

தனது பிஆர்வுக்கு சொல்லி வாய்ப்பு தேடுகிறாராம் அம்மணி.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »