அனாமதேய தொலைபேசி அழைப்பு தொடர்பான செய்தி வெறும் வதந்தி,புலிகளுக்கும் எந்த தொடர்புமில்லை.

Photobucketகையடக்கத் தொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புக்களைப் பெற்று அவர்களுடன் உரையாடும் போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நேற்று இரவு முதலாவதாக எமது தளம் தான் செய்தி வெளியிட்டிருந்தது.அனைத்து முன்னணி தளங்களும் இன்று காலை தொலைத்தொடர்பு ஆணைக்குழு வெளியிட்ட வதந்தி என்ற செய்தியை தான் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பதனை குறிப்பிட்டிருந்தோம் எமது செய்தியில்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது :

கையடக்கத் தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) அனுப்பப்பட்டது.

அக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ் சேவை (DD News) உறுதி செய்வதாகவும், இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது.

இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் விசாரித்ததுடன் தமது தொலை பேசிகளையும் நிறுத்தி வைத்தனர்.

இது தொடர்பாக “டயலொக்” நிறுவனம் எந்தச் செய்திகளையோ, குறுந் தகவல்களையோ வெளியிடவில்லை என்றும், இது மக்களைப் பீதியடையச் செய்ய சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியே என்றும் “டயலொக்” நிறுவனத்தின் யாழ். அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொய்யான குறுஞ்செய்தி பரப்பப்பட்டு வருகிறது – தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு

யாழ்ப்பாண குடாநாடு உட்பட்ட ஏனைய பகுதிகளில் பரப்பப்பட்டு வரும் குறுஞ்செய்திகள் பொய்யானவை என இலங்கை தகவல் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்து தொலைபேசி இலக்கங்களை தந்து அந்த இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளித்தால் மரணம் சம்பவிக்கும் என்ற அடிப்படையில்  இந்த குறுஞ்செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இது பொய்யானது என தெரிவித்துள்ள  தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஸ பெல்பிட்ட, இது இந்தியாவில் இருந்தே பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

இவ்வாறன வதந்தி பரப்பி தேவை இல்லாத அச்சத்தை உருவாக்குபவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.அதுமட்டுமில்லாமல் இப்படியான செய்திகளில் இந்தியாவின் சில பொய் பத்திரிகைகளின் பாணியில் புலிகளையும் இணைத்து கதைகட்டியுள்ளார்கள்.இது புலிகளின் பெயரை கெடுக்க நினைக்கும் சில விசமிகளின் செயல்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: